தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதலர்களுக்கு, மருத்துவமனையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது....
திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.
திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதலர்களுக்கு, மருத்துவமனையிலேயே திருமணம் நடந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக விகரபாத்தைச் சேர்ந்த நவாசும், அதே பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா பேகமும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ரேஷ்மா பேகம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் ரேஷ்மா சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த நவாசும் பூச்சி மருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரு வீட்டாரின் பெற்றொர் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
Vikarabad: A couple Reshma and Nawaz got married in a hospital. The two had earlier attempted suicide after parents opposed their relationship. The families gave consent after the suicide attempt. #Telangana pic.twitter.com/AHFvEBPd4b
— ANI (@ANI) January 12, 2019
இதையடுத்து, விகரபாத்தில், இருவரும் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே, நவாஸ், ரேஷ்மா பேகம் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.