புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தபோதிலும் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பல மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,22,315 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய 38 நாட்களில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
27,20,716 பேருக்கு தற்போது கோவிட் நோய் உள்ளது. அதே நேரத்தில் COVID-19 நோயிலிருந்து மீண்டவர்களின் சதவிகிதம் 88.69 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை என்ற புதிய அச்சங்களுடன் மஞ்சள் பூஞ்சை என்ற புதிய அபாயமும் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது கவலைகளை அதிகரிக்கின்றன.
Also Read | Cyclone Yaas: மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது, மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்
COVID நோயில் இருந்து் மீண்டவர்களுக்கு, அதன் பக்கவிளைவுகள் தோன்றுவது தொடர்பான பல வழக்குகள் நாடு முழுவதும் பதிவாகியிருக்கிறது. பிந்தைய சிக்கல்கள் பல மாநிலங்களில் இருந்து
இந்தியாவில் கோவிட் இறப்புகள் இப்போது 300,000 என்ற எண்ணிக்கையை தாண்டிவிட்டது. சர்வதேச அளவில் கொரோனாவால் அதிக அளவு இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது
ALSO READ | கர்நாடகாவில் Covaxin தடுப்பூசி உற்பத்தி விரைவில்; வெளியானது முக்கிய தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR