இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான முதல் டி 20 போட்டியைக் காணச் சென்ற ஒரு சில மாணவர்கள் மூலம், புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அகமதாபாத் (IIMA) வளாகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதாகக் கூறப்படுகிறது. அங்கு 28 பேருக்கு கொடிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், அதிகரித்த COVID-19 தொற்று நிலவரம் காரணமாக மீதமுள்ள போட்டிகளைக் காண ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என குஜராத் கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது.
அகமதாபாத் மிரரில் வந்த ஒரு அறிக்கையின்படி, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் (மார்ச் 12) நேராகச் சென்று போட்டியைப் பார்த்தவர்களில் ஐந்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதி செய்யப்பட்டது. மார்ச் 16 அன்று இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, IIMA இவர்களுடன் தொடர்பில் வந்த நபர்களுக்கு சோதனை செய்யத் தொடங்கியது. கல்வி நிறுவனத்தின் வளாகத்திலேயே தங்குபவர்கள், வெளியிருந்து பணிக்கு வருபவர்கள் என இந்த கல்வி நிறுவனத்தில் சுமார் 2500 பேர் உள்ளனர்.
ALSO READ: Disease X: கொரோனாவை விட பயங்கரமான வைரஸ் விரைவில் வருகிறது, எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
"நாங்கள் வியாழக்கிழமை சுமார் 90 பேருக்கு பரிசோதனை செய்தோம்; சோதனைகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படுகின்றன,” என்று பெயரிடப்படாத ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். "தொற்று அதிகமானதும், கோவிட் நெறிமுறைகளை (COVID Guidelines) செயல்படுத்துவதில் நாங்கள் மேலும் கடுமையாகிவிட்டோம். வளாகத்திற்குள் உள்ள உணவு உட்கொள்ளும் இடமான ஃபுட் கோர்டில், உணவை எடுத்துச் செல்ல மட்டுமே முடியும். அமர்ந்து உண்ண முடியாது. மெஸ்ஸில் அமர்ந்து உண்ணும் போதும் தனி மனித இடைவெளியை கடைபிடித்து அமர வேண்டும். வகுப்புகள் முற்றிலும் ஆன்லைன் முறையில் நடக்கின்றன.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப் படவில்லை என்றும், அவர்கள் ஆஃப்லைனில் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டதாகவும், அதுவே தொற்று அதிகமாகப் பரவ காரணம் என்றும் PGP-2 மாணவர்கள் கூறியுள்ளனர்.
எனினும், இது ஒரு அப்பட்டமான பொய் என்று IIMA கூறியுள்ளது. "மாணவர்களுக்கு தேர்வுகள் இருப்பதை நாங்கள் அறிவோம், ஆனால் அவர்களின் உடல்நலம் மற்றும் வளாகத்தில் உள்ள மற்றவர்களின் உடல்நலம் ஆகியவற்றுக்கு தான் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுதுத அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அத்தகைய மாணவர்களுக்கு மருத்துவ அனுமதி வழங்கப்படும் வரை தேர்வுகளிலிருந்து விடுப்பு வழங்கப்படுகிறது. மருத்துவ உடற்தகுதி சான்றிதழ் கிடைத்தவுடன் அவர்கள் தேர்வு எழுத முறையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து தேர்வு அலுவலகம் அவர்களுக்கு உதவும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe