இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட்-19 தொற்று பாதிப்புகள், அதிகரித்து கொண்டே போகின்றன. இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்புகள் உச்சம் தொட்டுள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர் கால அடிப்படையில் மத்திய அரசு, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கொரோனா (Corona Virus) நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சார் தாம் யாத்திரைக்கு அனுமதி இல்லை என உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார் தாம் என்பது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கான யாத்திரை. இவை உத்தரகண்டின் கர்வால் பகுதியில் அமைந்துள்ள இந்துக்களுக்கான புனித தலங்கள்.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
நான்கு கோவில்களிலும், பக்தர்கள் இல்லாமல் தினசை பூஜைகளை அந்தந்த கோவிலின் பூசாரிகள் மேற்கொள்வார்கள் என்று உத்திராகண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் கூறினார். இந்த சார் தாம் யாத்திரை மே 14 முதல் தொடங்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சார்தாம் யாத்ரீகர்களை பதிவு செய்வதற்கும், அவர்கள் யாத்திரை மேற்கொள்வதற்கும் ஆன நடத்தை விதிமுறைகள் முன்பு தயாரிக்கப்பட்டன. எனினும், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, மிக வேகமாக பரவி வருவதால், அரசு இப்போது சார் தாம் யாத்திரைக்கும் அனுமதி இல்லை என முடிவெடுத்துள்ளது.
முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா அலை உச்சத்தை தொட ஆரம்பித்த நிலையில், உத்தராகண்டில் நடந்த கும்பமேளா குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது கொரோனான் பரவலின் தீவிரம் மிக அதிகமாக உள்ளதால், உத்தரகண்ட் அரசு சார் தாம் யாத்திரைக்குத் தடை விதித்துள்ளது.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 3645 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், 2,69,507 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். முன்னதாக செவ்வாய்க்கிழமை, நாட்டில் 360,960 புதிய பாதிப்புகள் பதிவாகின
ALSO READ | PM Cares நிதியிலிருந்து ஒரு லட்சம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க மத்திய அரசு உத்தரவு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR