வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களின் விலை ரூ.46.50 குறைந்து ரூ.699.50 ஆக உள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சிலிண்டரின் விலை ரூ.746-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதத்திற்கான விலை மாற்றம் நேற்று அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் காஸ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. இதன்படி சிலிண்டரின் விலை ரூ.46.50 குறைந்து ரூ.699.50 ஆக உள்ளது. மானியமாக ரூ.229.50 வழங்கப்படும். இதேபோல், வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை கடந்த பிப்ரவரி மாதம் ரூ.1,387.50 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.1,307 ஆக குறைந் துள்ளது.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது:- வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை சிலிண்டரின் விலை அதிகரிக்கும். அதேபோல், மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சிலிண்டரின் விலை குறையும்.
அந்த வகையில், தற்போது சிலிண்டரின் விலை குறைந்துள்ளது என்றார்.