ஊழலைப் பற்றி பேசும் பிரதமர் நரேந்திர மோடி, 40 சதவீத கமிஷன் வாங்கும் ஊழல் தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார்.எதிர்வரும் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 40 இடங்களுக்கு மேல் கொடுக்கக் கூடாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை கர்நாடக மாநில வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின்முன்னாள் தலைவர், காங்கிரஸுக்கு குறைந்தபட்சம் 150 இடங்களையாவது வழங்க வேண்டும், இல்லையெனில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
"அவர்களுக்கு 40 இடங்களுக்கு மேல் கொடுக்க வேண்டாம்" என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி ஊழலைப் பற்றி பேசும்போதும், 40 சதவீத கமிஷன் வாங்கும் ஊழல் தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார்.
மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு வழக்கு: கிளைமேக்ஸ் இன்னும் முடியல.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஊழலுக்கு எதிராக அவர் போராடவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றார். "முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஊழலில் ஈடுபடவில்லை என்றும், 40 சதவீத கமிஷன் வாங்காததால், அவருக்கு பா.ஜ.க டிக்கெட் கொடுக்க மறுத்தது," என ராகுல் காந்தி கூறினார்.
மைசூர் சாண்டல் சோப்பு ஊழல் வழக்கில் எம்எல்ஏ மகன் கையும் களவுமாக பிடிபட்டார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமன ஊழல், உதவி பேராசிரியர் முறைகேடு, உதவி பொறியாளர் பணி மோசடி என பல ஊழல்கள் நடந்துள்ளன. எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து வாங்கிய பா.ஜ.க.திருட்டுக்கு துணை போகும் அரசு என்று ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
"பாஜக தலைவர்கள் பசவண்ணா ஜி பற்றி பேசுகிறார்கள், அவர்கள் அவருக்கு முன்னால் தலைவணங்குகிறார்கள், ஆனால் அவரது போதனைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள். பாஜக ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராக போராட வைக்கிறது. பாஜக தலைவர்கள் பசவண்ணாவின் கொள்கைகளை பின்பற்றவில்லை, 2-3 கோடீஸ்வரர்களுக்கு உதவுகிறார்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்சனைகளை மட்டுமல்ல மக்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை" என்று ராகுல் காந்தி கூறினார்.
மேலும் படிக்க | கர்நாடக தேர்தல்2023: யுடர்ன் போட்ட எடப்பாடி - அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்
"கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் மக்களிடம் 40 சதவீத கமிஷனை பாஜக பெற்றுள்ளது. இப்போது, நாங்கள் (காங்கிரஸ்) மக்களுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
கர்நாடக ஏழை மக்களுக்கு காங்கிரஸ் நான்கு வாக்குறுதிகளை அளிக்கிறோம் என்று ராகுல் காந்தி கூறினார். கர்நாடக மாநில தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில் உல்ள முக்கியமான நான்கு தேர்தல் வாக்குறிகள் ஏழை மக்களுக்கானவை.
காங்கிரஸின் கர்நாடக மாநில தேர்தல் வாக்குறுதிகள் இவை
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘க்ருஹ லட்சுமி’ திட்டம்
200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘க்ருஹ ஜோதி’ திட்டம்
ஒவ்வொரு பிபிஎல் குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்கும் 'அன்ன பாக்யா' திட்டம்
பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.3,000 மற்றும் தலா ரூ.1,500 வழங்கப்படும் 'யுவ நிதி' திட்டம்
இந்த வாக்குறுதிகளை, காங்கிரஸ் கட்சி அமைத்த முதல் நாளிலேயே அமல்படுத்தப் போவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும் படிக்க | திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை - செந்தில்பாலாஜி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ