பெங்களூரு வன்முறை: காங்கிரஸ் கார்பரேட்டர் கணவர் உட்பட பலர் கைது!!

பெங்களூரு வன்முறை தொடர்பாக இதுவரை மொத்தம் 206 பேர் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், நாக்வாரா வார்டு காங்கிரஸ் கட்சி கார்பரேட்டர் இர்ஷாத் பேகத்தின் கணவர் கலீம் பாஷாவுன் அடங்குவார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2020, 11:00 AM IST
  • பெங்களூருவில் ஆகஸ்ட் 11 நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 60 பேரை கைது.
  • கைது செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் கட்சி கார்பரேட்டர் இர்ஷாத் பேகத்தின் கணவர் கலீம் பாஷாவுன் அடங்குவார்.
  • வன்முறை குறித்து மாவட்ட மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்துவார்- கர்நாடக உள்துறை அமைச்சர்.
பெங்களூரு வன்முறை: காங்கிரஸ் கார்பரேட்டர் கணவர் உட்பட பலர் கைது!! title=

பெங்களூரு: பெங்களூருவில் ஆகஸ்ட் 11 நடந்த கலவரம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் மேலும் 60 பேரை கைது செய்துள்ளனர். இதனுடன் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 206 பேர் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட 60 பேரில், நாக்வாரா வார்டு காங்கிரஸ் கட்சி கார்பரேட்டர் இர்ஷாத் பேகத்தின் கணவர் கலீம் பாஷாவுன் (Kaleem Basha) அடங்குவார். பாஷாவுக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் SDPI ஆகியவற்றுடன் நெருங்கிய அரசியல் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகஸ்டு 11 ஆம் தேதி, ஒரு கும்பல் புலகேசிநகர் எம்.எல்.ஏ அகண்ட ஸ்ரீநிவாச மூர்த்தியின் (Akhanda Srinivas Murthy) வீட்டைத் தாக்கியது. காங்கிரஸ் கட்சித் தலைவரின் ஒரு உறவினர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய ஒரு கருத்தே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. இந்தக் கூட்டம் வெறிபிடித்த விதத்தில், பெங்களூருவின் டி.ஜே.ஹல்லி மற்றும் கே.ஜி.ஹல்லி காவல் நிலைய பகுதிகளில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டது.

வன்முறையை கட்டுப்படுத்த காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இறந்தனர். வன்முறை மோதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறைக்கு அடுத்த நாள், குறைந்தது 145 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ALSO READ: ஆகஸ்ட் 15 வரை பெங்களூரின் டி.ஜே.ஹல்லி, கே.ஜி.ஹல்லி பகுதிகளில் பிரிவு 144 உத்தரவு

கர்நாடக துணை முதல்வர் சி.என். அஷ்வத்நாராயண் பெங்களூரு வன்முறைச் (Bengaluru Violence) சம்பவம் அப்பாவி குடிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் கூறினார்.

"நேற்றிரவு ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும், அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும், அரசாங்கத்தால் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

வன்முறையின் அளவும் ஒழுங்கமைக்கப்பட்ட தன்மையும் இந்த வன்முறை முற்றிலும் திட்டமிடப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது" என்று அவர் ட்வீட் செய்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக இடுகையை வெளியிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவின் மருமகன் நவீன் கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறை குறித்து மாவட்ட மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்துவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

ALSO READ: பெங்களூரில் எம்.எல்.ஏ உறவினரின் பேஸ்புக் பதிவால் வெடித்த வன்முறை: 2 பேர் மரணம்

Trending News