இந்த நாடு மக்களால் உருவானது, துண்டு நிலங்களால் அல்ல -ராகுல்!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து குறித்து பெரும் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையிலை "இந்த நாடு மக்களால் உருவானது. துண்டு நிலங்களால் அல்ல" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 6, 2019, 01:39 PM IST
இந்த நாடு மக்களால் உருவானது, துண்டு நிலங்களால் அல்ல -ராகுல்! title=

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து குறித்து பெரும் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையிலை "இந்த நாடு மக்களால் உருவானது. துண்டு நிலங்களால் அல்ல" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் நேற்று கூடின.  இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதாக்களை தாக்கல் செய்து பேசுகையில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, அதிகாரம் அளிக்கும் 370 மற்றும் 35 ஏ-வது பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் என ஒரு யூனியன் பிரதேசம், லடாக் என மற்றொரு யூனியன் பிரதேசம் என இரு பகுதிகளாக பிரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  இதில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

இந்நிலையில், மக்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இன்று தாக்கல் செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது., "ஜம்மு மற்றும் காஷ்மீரை ஒருதலைப்பட்சமுடன் பிரிப்பதிலோ, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கைது செய்வதிலோ மற்றும் நமது அரசியலமைப்பினை மீறுவதிலோ தேசிய ஒருமைப்பாடு வளர்ச்சி அடையபோவதில்லை" என குறிப்பிடுள்ளார்.

மேலும் ‘இந்த நாடு மக்களால் உருவானது. துண்டு நிலங்களால் அல்ல.  இந்த அதிகார துஷ்பிரயோகம் நமது தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News