மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக, முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
இது திரிணமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆத்திரத்தை உண்டாக்கியது. அதன் எதிரொலியாக, சுவேந்து அதிகாரியின் வாகனத்தை தாக்கியதோடு, நந்திகிராமில் உள்ள பாஜக (BJP) அலுவலகங்களில் ஒன்றை திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்கள் தீ வைத்து கொளுத்தினர். வன்முறை தாக்குதலில் 11 பேருக்கும் அதிகமானோர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாது, இடது சாரி கட்சிகளின் தொண்டர்களையும் தாக்கி, அவர்களது வீடு புகுந்த அவர்கள் மனைவிகளை கற்பழித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்று, எதிர்க்கட்சித் தொண்டர்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என கோரியது.
இதனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை, சீர் கெட்டு போயுள்ளது. நந்திகிராமில் பதற்றம் நிலவுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “அரசே கட்டவிழ்த்துள்ள வன்முறையால் வங்காளம் பற்றி எரிகிறது. நாட்டின் தேர்தல் வரலாற்றில் ஒருபோதும் காணாத காட்சிகள் இவை” என்று குற்றம் சாட்டினார்.
மேற்குவங்கத்தில் நடத்தி வரும் வன்முறைகள் மற்றும் அங்குள்ள பதற்ற நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கருடன் பேசியதை அடுத்து, மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
ALSO READ | மம்தா தோல்வியால் ஆத்திரம்; BJP அலுவலகத்தை கொளுத்திய TMC தொண்டர்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR