கர்நாட்டக மாணவரின் வாழ்க்கையை மாற்றிய Revaluation ரிசல்ட்!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலத்தில் 2 இடம் பிடித்த மாணவர், மறுமதிப்பீட்டில் முதலிடம் பிடித்த விவகாரம் அனைவரது கவணத்தினையும் ஈர்த்துள்ளது!

Last Updated : Jun 9, 2018, 04:14 PM IST
கர்நாட்டக மாணவரின் வாழ்க்கையை மாற்றிய Revaluation ரிசல்ட்! title=

பெலகாவி: கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலத்தில் 2 இடம் பிடித்த மாணவர், மறுமதிப்பீட்டில் முதலிடம் பிடித்த விவகாரம் அனைவரது கவணத்தினையும் ஈர்த்துள்ளது!

பெலகாவி St Xavier's பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர் மொகமத் காய்ப் முல்லா. இவர் தனது பத்தாம் வகுப்பு தேர்வில் 625-க்கு 624 மதிப்பெண்கள் குவித்து மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.

ஆனால் இவருக்கு இவர் பெற்ற மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்துள்ளது. தான் எழுதிய அணைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்ணை பெற்றிருப்பேன் என என்னிய அவர் தேர்வு தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார்.

இந்த மறுகூட்டலில் அவர் என்னியது போலவே மீதமிருந்த ஒரு மதிப்பெண்னும் இவருக்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து 625-க்கு 625 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.

தற்போது RLS College of KLE Institution கல்லூரியில் அறிவியில் பிரிவு எடுத்தப் படித்து வரும் மொகமத் வரும்காலத்தில் IAS ஆக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தில் இருக்கும் போது தான் வலியவர்களுக்கான அனைத்து நல்ல விசயங்களையும் செய்ய முடியும், எனவே அந்த அதிகார பதவியை சென்றடைவதே என் இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.

மொகமத் காய்ப்-ன் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மொகமத் காய்ப்-ன் தந்தை ஹரோன் ரூசித் முல்லா உருது ஆசிரியாராகவும், அவரது தாயார் கர்நாட்டக அரசு பள்ளியின் கன்னட மொழி ஆசிரியராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News