போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் சித்ரகூட் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி வெற்றி!
மத்திய பிரதேசம் மாநிலம் சித்ரகூட் எம்.எல்.ஏ பிரேம்சிங் இறந்ததை அடுத்து சித்ரகூட் சட்டப்பேரவை தொகுதிக்கு நவம்பர் 9-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் நிலான்ஷு சதுர்வேதி மற்றும் பா.ஜ.க. சார்பில் சங்கர்லால் திரிபாதி உள்ளிட்ட 12 கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், வாக்குகளை எண்ணும் பணி சட்னா மாவட்டத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் சதுர்வேதி, பா.ஜ.க. வேட்பாளர் திரிவேதியை விட முன்னிலை வகித்து வந்தார்.
#MadhyaPradesh: Members of Congress celebrate outside MP Congress Committee as its candidate Nilanshu Chaturvedi leads in #Chitrakoot by-poll. pic.twitter.com/MexBQyfzg8
— ANI (@ANI) November 12, 2017
வாக்கு எண்ணிக்கை முடிவில், பா.ஜ.க. வேட்பாளரை விட 14,100 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் சதுர்வேதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.