தங்க நகைகள் 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் ஹால் மார்க் முத்திரையுடன்தான் விற்க வேண்டும் என 2019ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் (Piyush Goyal) தங்க நகை விற்பனையார்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க் (Hallmark) முத்திரையை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது.
ALSO READ | தங்கத்தின் விலையில் உயர்வு, வெள்ளியின் விலையும் உயர்ந்தது
தங்கம் விலை உச்சத்தில் இருந்தாலும் தங்க கடைகளில் கூட்டம் என்றுமே குறைவதில்லை. நாம் விலை அதிகம் கொடுத்து வாங்கும் தங்கம் (Gold), நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற சுத்தமானதாக உள்ளதா என்றால், பல இடங்களில் நிச்சயம் அவ்வாறு இல்லை என்று தான் கூற வேண்டும். இதில் நடக்கும் பல முறைகேடுகளை தடுப்பதற்காக, தங்க நகைகளை விற்கும் போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி தங்க நகை விற்பனையாளர்கள் இனி, 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பு BIS சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும். நாடு முழுவதும், தற்போது 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளன. சுமார் 35,879 நகைக்கடைகள் இதில் பதிவு செய்துள்ளன.
இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அனைத்து நகைக்கடைக்காரர்களும் தற்போது, ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோல்ட் ஹால்மார்க்கிங் விதியை அமல்படுத்திய பின்னர், வீட்டில் பழைய தங்கம் இருந்தால் என்ன நடக்கும் என கேள்வி எழலாம். வீட்டில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கு இந்த விதி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. அவற்றை எளிதாக நகைக்கடைக்காரர்களுக்கு விற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Gold smuggling: இந்த ஜட்டியின் விலை 4.5 கோடி ரூபாய்! தங்க உள்ளாடையல்லவா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR