சந்திரயன் 2: இன்று காலை தொடங்கியது 20 மணிநேர கவுன்ட்டவுன்..!

இஸ்ரோவின் மைல்கல் சந்திரயன் 2-யின் இருபது மணிநேர கவுண்டன் துவங்கியது.!!

Last Updated : Jul 14, 2019, 11:14 AM IST
சந்திரயன் 2: இன்று காலை தொடங்கியது 20 மணிநேர கவுன்ட்டவுன்..! title=

இஸ்ரோவின் மைல்கல் சந்திரயன் 2-யின் இருபது மணிநேர கவுண்டன் துவங்கியது.!!

லவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலம் நாளை அதிகாலை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. 

உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இந்நிலையில் இறுதிகட்ட பணிகள் முடிந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலதை விண்ணில் ஏவ இந்தியா தயாராகி வருகிறது. நாளை அதிகாலை 2.51 மணியளவில் 3850 கிலோ எடைகளுடன் சந்திராயன்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான கவுன்ட் டவுன் காலை 6.51 மணிக்கு தொடங்கியது. சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது. வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்ட உடன், இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திராயன் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும். 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடையப்போகிறது சந்திராயன் 2. இந்த சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த 978 கோடி ரூபாயை இந்தியா செலவழித்துள்ளது. இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தை சந்திராயன் - 2 தனது தடத்தை பதிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News