மானிய விலையில் பாரத் அரிசி... கிலோ ₹29 மட்டுமே... அடுத்த வாரம் முதல் விற்பனை!

பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையிலும், மத்திய அரசு பாரத் அரிசி என்னும் திட்டத்தை தொடக்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 3, 2024, 03:36 PM IST
மானிய விலையில் பாரத் அரிசி... கிலோ ₹29 மட்டுமே... அடுத்த வாரம் முதல் விற்பனை! title=

ஏழை எளிய மக்கள் மட்டுமல்லாது நடுத்தர மக்களும் பலன் அடையும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னால் பாரத் ரைஸ் எனப்படும் குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. விலைவாசியை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பண வீக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முன் முயற்சியின் கீழ், அடுத்த வாரம் முதல் மானிய விலையில் பாரத் அரிசி என்ற பெயரில், அரிசி விற்பனை மேற்கொள்ளப்படும். ஒரு கிலோ அரிசியை 29 ரூபாய்க்கு என்ற விலையில் விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மதிய உணவுத் துறை செயலரின் செய்தியாளர் சந்திப்பு

பாரத் அரிசி தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உணவு துறை செயலர் திரு சஞ்சீவ் சோப்ரா, மத்திய அரசு அரிசியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அரிசியின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார். எனவே அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் NAFED எனப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் NCCF எனப்படும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் மானிய விலையில் பாரத் அரிசியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்றார்.

பாரத் கோதுமை மற்றும் பாரத் பருப்பு

அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் பாரத் அரிசி ஒரு கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் கிடைக்கும். மானிய விலை அரிசி திட்டத்திற்கு அரசு 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்துள்ளது. பாரத் அரிசி மட்டுமல்லாது பாரத் ஆட்டா என்ற பெயரில் கோதுமை மாவு விற்பனையையும், பாரத் தால் என்ற பெயரில் பருப்பு வகைகள் விற்பனையையும் அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. பாரத் கோதுமை கிலோ ஒன்றுக்கு 27 ரூபாய் 50 பைசாவிற்கும் பாரத் பருப்பு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள்

அரிசியின் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. விலை குறையும் வரை, கட்டுப்பாடுகளை நீக்கும் எண்ணம் எதுவும் அரசிடம் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது. அதோடு அரிசி இருப்பு குறித்த விவரங்களை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று, வெளியிட வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த வெப்பனையாளர்களுக்கு உணவுத்துறை உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

அரிசி பதுக்கலை தடுக்க நடவடிக்கை

விலையை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடன் கூடவே பதுக்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகவே இருப்பு விவரங்களை அரசு கூறுகிறது. சில்லரை மொத்த வணிகர்கள் மட்டுமின்றி அரிசி ஆலைகளும் தங்களிடம் உள்ள, சாதாரண அரிசி, பாஸ்மதி அல்லாத அரிசி, பாஸ்மதி அரிசி, புழுங்கல் அரிசி, உடைந்த அரிசி என அனைத்து அரிசி ரகங்களின் இருப்பு விவரங்கள் குறித்த தகவல்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உணவுத்துறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க | Air Strikes:பழிக்கு பழி! ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்காவின் தாக்குதல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News