CBSE: 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வி அமைச்சகம்

 CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 14, 2021, 02:44 PM IST
  • CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது கல்வி அமைச்சகம்.
  • CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
  • தேர்வுகள் எப்போது நடக்கும் என்பது பற்றி ஜூன் 1 அன்று தொற்றின் நிலையைப் பார்த்தபின் முடிவெடுக்கப்படும்.
 CBSE: 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வி அமைச்சகம் title=

CBSE Board Exam Latest Updates: CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பல தரப்பிலிருந்தும் CBSE பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழவே, இந்த வார தொடக்கத்தில் கல்வி அமைச்சகம் மற்றும் CBSE ஒரு சந்திப்பை நடத்தியது. இன்று இது குறித்த உயர் மட்ட சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

கடந்த ஆண்டும், கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ சில பாடங்களுக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது. மேலும் சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் இந்த பாடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது. 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு பதில், மாணவர்களுக்கான மதிப்பீடு எந்த விதத்தில் செய்யப்படும் என்பது குறித்து விளக்கமாக பின்னர் அறிவிகப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கான புது தேதிகளும் கொரோனா தொற்று (Coronavirus) ஆய்வுக்கு பின்னர் அறிவிக்கப்படும். 

முன்னதாக, கடந்த சில நாட்களாக, CBSE 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. இந்தியாவில் கொரோனாவின் அலை மீண்டும் தன் கொடூர முகத்தைக் காட்டிவரும் நிலையில், தற்போது தேர்வுகளுக்காக மாணவர்களை அலைகழித்து, அவர்களை தொற்றின் பாதையில் தள்ள முடியாது என பலரும் கேட்டுக்கொண்டனர். 

கடந்த ஆண்டு நடந்ததைப் போலவே, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும், தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என்றும் முன்னர்  CBSE கூறியிருந்தது. எனினும், தினமும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது தேர்வுகளை நடத்த முடியாத நிலை உள்ளது என உணர்ந்த  CBSE அதன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. எனினும், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், அதற்கான மாற்று தேதிகளைப் பற்றி தொற்றின் நிலை சார்ந்து அமைச்சகம் முடிவெடுக்கும்.  

ALSO READ: Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு நிபுணர் குழு பரிந்துரை

ALSO READ: கொரோனா நிலைமை மேம்படும் வரை Remdesivir ஊசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News