காவிரி விவகாரம்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்

Last Updated : Sep 12, 2016, 07:32 PM IST
காவிரி விவகாரம்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல் title=

தமிழர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். காவிரியில் செப்டம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினசரி 12,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று மேல் முறையீடு மனு மீதான விசாரணையில் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் பெரும் வன்முறை வெடித்தது.

இந்நிலையில் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர். மைசூரில் தமிழகத்தை சேர்ந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெங்களூரில் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல்கள் மீதும், பூர்விகா செல்போன் ஷோரூம் மீதும் கன்னட அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தமிழக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தமிழகத்தில் ஒருவரை கொன்றால், இங்கு 10 பேரை கொல்ல வேண்டும் என்று சிலர், கோஷமிட்டனர்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக ட்விட்டரில் போலீசார் அறிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

Trending News