இந்தியாவில், ஐந்து மாநிலங்களில் சட்ட மன்ற தேர்தல்கள் நடைபெறும் நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அஸ்ஸாம் மாநிலத்தில் 39 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில், இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இரண்டு மாநிலங்களிலும் வாக்குப் பதிவை நேர்மையாகவும்,அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது நந்திகிராம் தொகுதி.
மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக இருந்த நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பேனர்ஜி (Mamatha Banerjee) போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக சார்பில் முன்னாள் அமைச்சரும், ஒரு காலத்தில் மம்தாவுக்கு நெருக்கமாக திகழ்ந்தவருமான சுவேந்து அதிகாரி களத்தில் உள்ளார். இருவருக்குமே இது வாழ்வா சாவா போராடம் தான். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடிப்பேன் என்று சுவேந்து அதிகாரி சவால் விடுத்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இவற்றில், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ALSO READ | மேற்குவங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மம்தா பேனர்ஜியின் ஆடியோ
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR