சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்... இனி ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போகலாம் - முழு விவரம்

Bullet Train Chennai - Mysore: சென்னை - மைசூர் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் திட்டத்தின் வரைவு ரயில்வே துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 26, 2024, 06:41 PM IST
  • புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ. வேகத்திற்கு செல்லும்.
  • புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே வர உள்ளது.
  • இது பயண நேரத்தை கணிசமாக குறைக்கும்.
சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்... இனி ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போகலாம் - முழு விவரம் title=

Bullet Train Chennai - Mysore: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறையாக தற்போது ஆட்சியமைத்திருக்கிறது. கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஆட்சியமைத்த தே.ஜ., கூட்டணி அதன் முதல் பட்ஜெட்டை கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 26) அன்று வெளியிட்டது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளமும் முறையே தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களான ஆந்திரா மற்றும் பீகாருக்கு அதிக நிதியையும், சிறப்பு திட்டங்களையும் பெற்றுவிட்டன.

மற்ற மாநிலங்கள் அதிலும் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்யப்பட்ட 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். புதிதாக தங்களின் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார். இது மத்திய பட்ஜெட்டை போல் இல்லை என்றும் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களின் பட்ஜெட் போல் இருப்பதாகவும் விமர்சித்து வந்தனர். 

புல்லட் ரயில் திட்டம்

இது ஒருபுறம் இருக்க, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாஜக அறிவித்த திட்டங்களில் சில காங்கிரஸின் மக்களவை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவை என்றும் அதில் இருந்து பாஜகவினர் காப்பி அடித்து நாற்காலியை தக்கவைக்க இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதாக கடுமையாக சாடியது. அதிலும் ரயில்வே துறைக்கு என நிதி ஏதும் தனியாக அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதிலும், பாமர மக்களுக்கான ரயில்களை சேர்க்காமல், வந்தே பாரத் ரயில்கள் மட்டும் அதிக முக்கியத்துவம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும் படிக்க | நிதி ஆயோக் கூட்டம்: 7 மாநில முதல்வர்களைத் தொடர்ந்து மம்தாவும் புறக்கணிப்பு?

ஆனால், இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் பாஜக தொடர்ந்து மறுத்து வந்தது. நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் வந்தே பாரத் ரயில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படும் நிலையில், அனைத்து தரப்பு பயணிகளுக்கும், அனைத்து விதமான போக்குவரத்துக்கும் போதுமான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, மக்களவை தேர்தலுக்கு முன்னரே புல்லட் ரயில் குறித்த பேச்சுகள் எழுந்தன. பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் புல்லட் ரயில் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. 

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில்

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்படும் எனவும், புல்லட் ரயிலுக்கான வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்றும் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது ஆட்சிக்கட்டிலில் மூன்றாவது முறையாக ஏறியிருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு புல்லட் ரயில் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புல்லட் ரயில் பயணிகளின் பயண நேரத்தை கணிசமான அளவிற்கு குறைக்கும். பிரத்யேகமாக அதற்கென வழித்தடம் அமைக்கப்பட வேண்டும். தற்போது முதல்முறையாக இந்தியாவில் மகராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் நகர் வரை முதல் புல்லட் ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இன்னும் சில நகரங்களுக்கு புல்லட் ரயில் கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

250 கி.மீ., வேகம்...

மைசூர் - சென்னை இடையே புல்லட் ரயில் இயக்க ரயில்வே துறையுடன் ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. ஒருவேளை அது உறுதிசெய்யப்பட்டால் இந்த இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் என்பது ஒரு மணிநேரமாக குறைந்துவிடும். முதற்கட்டமாக, சென்னை - பெங்களூர் வரையிலான 306 கி.மீ., தூரத்திற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்படம் என்றும் பெங்களூரு - மைசூர் இடையே 157 கி.மீ., தூரத்திற்கான வழித்தடம் பின்னர் அமைக்கப்படும்.

புல்லட் ரயில் மணிக்கு 250 கி.மீ., வேகத்திற்கு செல்லும் என கூறப்படுகிறது. இதன்மூலம், ஒருமணி நேரத்தில் புல்லட் ரயில் 250 கி.மீட்டரை கடக்கும். சென்னை - பெங்களூரு இடையே 11 ரயில் நிலையங்கள் உள்ளன, அதில் பெங்களூருவின் 3 ரயில் நிலையங்களும் அடக்கம். மேலும் இந்த திட்டத்திற்காக 30 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News