Budget 2024: இந்த மானியங்கள் கண்டிப்பாக உயரும்... அடித்துக்கூறும் நிபுணர்கள்

Budget 2024: இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை (Lok Sabha Election) கருத்தில்கொண்டு மத்திய அரசு (Central Government) சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2024, 06:33 PM IST
  • பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?
  • பட்ஜெட்டில் 3F மீது கவனம்.
  • உணவு, எல்பிஜி மற்றும் உர மானியம்.
Budget 2024: இந்த மானியங்கள் கண்டிப்பாக உயரும்... அடித்துக்கூறும் நிபுணர்கள் title=

Budget 2024: நாளை நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இன்னும் சில மாதங்களில் நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அமையும் புதிய அரசாங்கம், ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

பட்ஜெட் எதிர்பார்ப்புகள் (Budget Expectations)

இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை (Lok Sabha Election) கருத்தில்கொண்டு மத்திய அரசு (Central Government) சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த பட்ஜெட்டில் அரசின் கவனம் விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகிய நான்கு பிரிவினரின் பக்கம் இருக்கும் என நம்பப்படுகின்றது. இதனுடன் 3F காரணி (3F Factor) குறித்து அரசு பெரிய அறிவிப்புகளை வெளியிடலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3F -இல் உணவு (Food), எரிபொருள் (Fuel) மற்றும் உரங்கள் (Fertilizer) ஆகியவை அடங்கும்.

பட்ஜெட்டில் 3F மீது கவனம்

உணவு, உரம் மற்றும் எரிபொருளுக்கு மானியம் வழங்குவது குறித்து முந்தைய பட்ஜெட்டிலேயே அரசு வலியுறுத்தி இருந்தது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் பிற பிரிவினருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு மானியம் (Subsidy) வழங்குகிறது. மோடி அரசாங்கம் இந்த பிரிவினருக்கான மானியத் தொகையை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்த அரசு தனது முதல் ஆட்சிக் காலத்தில் ரூ.1,96,769 கோடியை மானியங்களுக்காகச் செலவிட்ட நிலையில், இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மானியத்தை கணிசமாக உயர்த்தியது. இவ்வாறான நிலையில், இம்முறையும் பட்ஜெட்டில் மானியத்தை அரசு குறைக்காது என்ற நம்பிக்கை உள்ளது. மானியம் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி உள்ள போதிலும், அதிகரிக்கப்படும் என்றே பல பொருளாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். 

உணவு, எல்பிஜி மற்றும் உர மானியம் (Food, LPG and Fertiliser Subsidy)

உணவு, எல்பிஜி மற்றும் உர மானியத்திற்கு கூடுதலாக ரூ.28,630.80 கோடி செலவிடும் திட்டத்தை நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் அரசு நிறைவேற்றியது. 2022-23 நிதியாண்டில், அரசின் மொத்த மானிய மசோதாவில் உணவின் பங்கு 47.7%, உரங்களின் பங்கு 44% மற்றும் எரிபொருளின் பங்கு 1.2% ஆகும்.

மேலும் படிக்க | EPS-95: ஓய்வூதியதாரர்களின் போராட்டம்....குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரிக்கை

பெரிய அறிவிப்புகள் வரலாம்: நிபுணர்கள் 

தேர்தலுக்கு சற்று முன் வரும் இந்த இடைக்கால பட்ஜெட்டில், மானியங்கள் மூலம் பெரும் வாக்கு வங்கிகளை ஈர்த்து மக்களின் ஆதரவைப் பெற  அரசு முயற்சிக்கும். தேர்தல் நேரத்தில் பட்ஜெட்டின் மூலம் மானியத்தொகையை உயர்த்தும் இந்த வாய்ப்பை அரசு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நம்பப்படுகின்றது. இந்த பட்ஜெட்டில் பிரதம மந்திரி கிசான் நிதி யோஜனா (PM Kisan), உணவு பாதுகாப்பு மானியம் (Food Security Scheme) மற்றும் உஜ்வாலா யோஜனாவின் (Ujjwala Scheme) கீழ் வழங்கப்படும் மானியத்தின் அதிகரிப்பு குறித்து பெரிய அறிவிப்புகளை அரசு வெளியிடலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

உணவு மற்றும் உர மானிய: எதிர்பார்க்கப்படும் ஒதுக்கீடு எவ்வளவு?

உணவு மற்றும் உர மானியத்திற்காக ரூ.4 லட்சம் கோடி ஒதுக்கீட்டை அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இலவச தானியத் திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அறிவிப்பையும் அரசு வெளியிடலாம். தற்போது, ​​பிஎம்-கிசான் (PM Kisan), எம்என்ஆர்இஜிஏ (MNREGA), உரங்கள், உணவு மற்றும் எரிபொருள் போன்ற திட்டங்களுக்கான மானியத்தின் அதிகபட்ச பயனை கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெறுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆண்டில் அரசு அதை குறைத்தோ, அல்லது தேவையற்ற மாற்றத்தை செய்தோ சிக்கலை ஏற்படுத்தாது என நம்பப்படுகின்றது. 

மேலும் படிக்க | Med Tech: வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புடன் மருத்துவ தொழில்நுட்பத்தில் முன்னேறத் துடிக்கும் இந்தியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News