Budget 2023: நிர்மலா சீதாராமன் அளிக்கவுள்ள மிகப்பெரிய நிவாரணம், இந்த விலக்கு வரம்பில் மாற்றம்

Budget 2023: தொற்றுநோய்க்குப் பிறகு அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு நிதியமைச்சர் மாத சம்பளதாரர்களுக்கு நிவாரணம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 10, 2023, 11:05 AM IST
  • மாத சம்பள வர்க்கத்தினருக்கான நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என வரி நிபுணர்கள் பரிந்துரை.
  • உழைக்கும் வர்க்கத்தினருக்கு நிதி அமைச்சகம் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • இம்முறை மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் தொகையை ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தலாம்.
Budget 2023: நிர்மலா சீதாராமன் அளிக்கவுள்ள மிகப்பெரிய நிவாரணம், இந்த விலக்கு வரம்பில் மாற்றம் title=

ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷண் நிவாரணம்: கொரோனா தொற்றுநோய் காரணமாக, 2022-23 பொது பட்ஜெட்டில் சம்பளம் பெறும் வகுப்பினருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்த முறை, 2023-24 பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்து சம்பள வர்க்கத்தினருக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.  இந்த பட்ஜெட் வரவிருக்கும் மக்களைவைத் தேர்தலுக்கு முன்னர் அரசு தாக்கல் செய்யவுள்ள கடைசி முழு பட்ஜெட் என்பதும் இதற்குக் காரணம். இத்தகைய சூழ்நிலையில், தொற்றுநோய்க்குப் பிறகு அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு நிதியமைச்சர் மாத சம்பளதாரர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரி நிபுணர்களின் பரிந்துரை

இந்த முறை பட்ஜெட்டில், மாத சம்பள வர்க்கத்தினருக்கான நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என வரி நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். உழைக்கும் வர்க்கத்தினருக்கு நிதி அமைச்சகம் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தொற்றுநோய்க்கு பிறகு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு அனைவரும் அலுவலகம் சென்று வேலைச் செய்வதால், போக்குவரத்து, வாடகை போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தொற்றுநோய் பரவிய நேரத்தில், வாடகை வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்லுமாறு சில நிறுவனங்கள் ஊழியர்களை கேட்டுக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Income Tax: 7 அடுக்குகள் கொண்ட வரிவசூல் முறை, முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் 75 ஆயிரம் ரூபாய்!

இப்போது நிறுவனங்கள் ஊழியர்களை திரும்ப அலுவலகம் வந்து பணி செய்யும்படி கூறியுள்ள நிலையில், ஊழியர்கள் மீண்டும் நகரங்களுக்கு குடிபெயர்வதால், அவர்களது செலவுகளும் அதிகரிக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் அளவை புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இம்முறை மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் தொகையை ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு தேவையான நிவாரணம் கிடைக்கும்.

நிலையான விலக்கு அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் என்றால் என்ன

சம்பளம் பெறுபவருக்கு அனைத்து வகையான செலவுகளுக்கும் வரி விலக்கு அளிக்க நிதி அமைச்சகத்தால் வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் மருத்துவச் செலவுகள், போக்குவரத்துக் கட்டணம் போன்றவற்றின் அடிப்படையில் ரூ. 40,000 ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஊதியம் பெறும் வகுப்பினருக்கு வருமான வரியில் இருந்து நிவாரணம் அளிக்க, போக்குவரத்துக் கட்டணமாகவும், மருத்துவப்படியாகவும் ரூ.19,200 மற்றும் ரூ.15,000 வழங்கப்பட்டது. இவை இரண்டும் சேர்த்து ரூ.34,200 கழிக்கப்பட்டது.

இதன் பின்னர் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் ரூ.40,000 ஆகவும், பின்னர் ரூ.50,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த பிளாட் தொகையானது வரி செலுத்துவோரின் மொத்த சம்பளத்தில் இருந்து குறைக்கப்படுகிறது. இதன் மூலம் வரியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. இது வேலை செய்யும் ஒவ்வொரு நபரின் சம்பளத்திலிருந்தும் கழிக்கப்படுகிறது. இதன் கீழ் விலக்கு பெற எந்த விதமான கோரிக்கையும் தேவையில்லை.

மேலும் படிக்க | Income Tax: கவலையை விடுங்கள்! வருமான வரியை 100% சேமிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News