கொரோனா (Corona) காலம் பல விசித்திரங்களை நமக்குக் காட்டுகிறது. ஒரு புறம், இளம் குழந்தைகளும் 100 வயதைத் தாண்டிய முதியவர்களும் இந்த தொற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்று வீடு திரும்பும் நிகழ்வுகளை நம பார்க்கிறோம். மறுபுறம், உடல் வலிமையும் மன வலிமையும் பெற்ற வீரர்கள் கூட இதன் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத வினோதங்களும் நடக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு விசித்திர சம்பாம்தான் மணிபூரில் (Manipur) நடந்துள்ளது.
இம்பாலின் (Imphal) கோனுங் கோங்னாங்கோங்கில் (Konung Khongnangkhong) ஒரு தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து செவ்வாயன்று தப்பித்து ஓடிய எல்லை பாதுகாப்புப் படை வீரர் (BSF Jawan) ஒருவரை இன்று மணிபூரின் மோய்ராங்கோமில் (Moirangkhom) சிங்ஜாமே (Singjamei) காவல்துறை கைது செய்தது.
ALSO READ: வீடு தேடி வரும் மருத்துவமனை…. கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் IIT …!!!
முன்னதாக, காலை 9:30 மணியளவில் அந்த வீரர் தனிமைப்படுத்தப்படும் மையத்திலிருந்து ஓடி விட்டதாக சிங்ஜாமே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரைத் தேடும் பணி முழு வீச்சில் துவக்கப்பட்டது.
காவல் துறையின் துரித நடவடிக்கையால் BSF வீரர் குமுக்சம் நோங்க்யாய் (Khumukcham Nongyai) பிடிபட்டார். அதற்குப் பிறகு அவர் லாம்பெல்பாட்டில் உள்ள மற்றொரு தனிமைப்படுத்தும் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மன அழுத்தம் (Mental Stress) காரணமாக BSF வீரர் தனிமைப்படுத்தப்படும் மையத்திலிருந்து (Quarantine Centre) தப்பித்து ஓடினார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.