முதலிரவில் பெண்ணுக்கு வயிற்று வலி..! மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..! இப்படியும் நடக்குமா?

தெலங்கானா மாநிலத்தில் முதலிரவு அறைக்குச் சென்ற புதுப்பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட அதற்கு பிறகு நடந்த சம்பவம் தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை தற்போது காணலாம்.   

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jun 30, 2023, 04:20 PM IST
  • முதலிரவில் வயிற்று வலி; அடுத்த நாள் குழந்தை
  • உடலில் உள்ள நோயை மறைத்து திருமணம் செய்வதை பார்த்திருப்போம்.
  • மகள் கர்ப்பமாக இருப்பதையே மறைத்து பெற்றோர் அவருக்கு திருமணம்.
முதலிரவில் பெண்ணுக்கு வயிற்று வலி..! மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..! இப்படியும் நடக்குமா? title=

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அந்த சமயம் தகாத உறவால் அந்த இளம்பெண் கர்ப்பமாகி உள்ளார். இதைப்பற்றி அப்பெண்ணின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் அதை மறைத்து மாப்பிள்ளை தேடியுள்ளனர். 

இதற்காக அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியது. டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த இளைஞருக்கும் இந்த இளம்பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பெண் பார்க்க வந்தபோது மணப்பெண்ணின் வயிறு பெரிதாக உள்ளதை கவனித்த மாப்பிள்ளை வீட்டார் அதுகுறித்து கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு கிட்னி ஸ்டோன் பிரச்சனையால் மணப்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அறுவை சிகிச்சை செய்ததால் வயிறு பெரிதானதாகவும் கதை கட்டியுள்ளனர். அதோடு வயிறு வீக்கம் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்றும் கூறி சமாளித்துள்ளனர். 

மேலும் படிக்க | திரிபுராவில் உல்டா ரத யாத்திரையின் போது என்ன நடந்தது? 7 பேர் பலி, 15 பேர் காயம்

இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி டெல்லியில் இளைஞருக்கும் கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணுக்கும் உறவினர்கள் நண்பர்கள் சூழ தடபுடலாக திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் பெற்றோர்கள் ஐதராபாத் சென்றுவிட்டனர். 

திருமணம் முடிந்த அன்று இரவு வழக்கம் போல முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகன் அறையில் காத்திருக்க, மணப்பெண் உள்ளே வந்துள்ளார். அவர் சிறிது நேரத்திற்கு எல்லாம் வயிறு வலிப்பதாக துடித்துள்ளார். தனக்கு வலி அதிகமாக இருப்பதாக கூறி அலறியுள்ளார். இதனால் பதறிப் போன மாப்பிள்ளை உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு மணப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றவர்களுக்கு செம ஷாக். மருத்துவர்கள் அந்த பெண்ணை சோதித்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு ஆடிப்போன மாப்பிள்ளை வீட்டார் செய்வதறியாது தவித்துள்ளனர். சிறிது நேரத்தில் மணப்பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்த சம்பவத்தால் கடுப்பின் உச்சிக்கே சென்ற மணமகன் வீட்டார் மணமகளின் பெற்றோருக்கு கால் செய்து முறையிட்டுள்ளனர். அவர்கள் செகந்திராபாத்தில் இருந்து உடனடியாக நோய்டா சென்றனர். அவர்கள் மணமகனிடம் எப்படியாவது என் பெண்ணை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் என கெஞ்சியுள்ளனர். ஆனால் கொலைவெறியில் இருந்த மணமகனும் அவரது உறவினர்களும் அவர்களை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதோடு இதுகுறித்து நொய்டாவில் உள்ள காவல் நிலையத்தில் மணமகனின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. 

காதலை மறைத்து, உடலில் உள்ள நோயை மறைத்து திருமணம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் இங்கே தங்கள் மகள் கர்ப்பமாக இருப்பதையே மறைத்து பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மேலும் படிக்க | Dress Code: கர்நாடாகவைப் போலவே கேரளாவில் கல்வியில் புகும் ஹிஜாப் பிரச்சனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News