Big Breaking டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் ராஜினாமா!

டெல்லி எல்ஜி ராஜினாமா: டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக பைஜால் தனது பதவியை ராஜினாமா எனத் தகவல். 

Written by - Shiva Murugesan | Last Updated : May 18, 2022, 05:50 PM IST
Big Breaking டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் ராஜினாமா!  title=

புது டெல்லி: டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணங்களுக்காக பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 31, 2021 அன்றுடன் அவரின் ஐந்தாண்டு பதவிகாலம் முடிந்தது. டெல்லி லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கு ஒரு நிலையான பதவிக் காலம் இல்லை.

2016 ஆம் ஆண்டு டிசம்பரில் டெல்லி லெப்டினன்ட் கவர்னராக அனில் பைஜால் பதவியேற்றார். கடந்த காலங்களில் அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பல பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: டெல்லி மருத்துவமனையில் யார் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம்; ஆளுநர் உத்தரவு!

1969 ஆம் ஆண்டு இந்திய நிர்வாக சேவையில் (IAS) சேர்ந்த பைஜால், 37 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நீண்ட வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்தார். பைஜால் அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

Delhi Lieutenant Governor Anil Baijal & Delhi CM Arvind (PTI Photo)

மத்திய உள்துறைச் செயலர், இந்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர், தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைமைச் செயலர், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் இந்தியன் ஏர்லைன்ஸின் தலைவர் மற்றும் எம்.டி., பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி, கோவாவின் மேம்பாட்டு ஆணையர், டெல்லியின் ஆணையர் (விற்பனை வரி மற்றும் கலால்), நேபாளத்தில் உள்ள இந்திய உதவித் திட்டத்தின் ஆலோசகர், இந்தியத் தூதரகம், காத்மாண்டு என பலப் பதவிகளில் பணியாற்றியுள்ளார். 

இதற்கிடையில், உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) முதல்வர் வேட்பாளராக இருந்த கர்னல் அஜய் கோதியால் (ஓய்வு பெற்றவர்), கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் ஒரு அதிகார மோதல்; தவிக்கும் டெல்லி மக்கள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News