போர்க்கப்பலில் உயிரிழந்த அதிகாரி லெப்டினன்ட் காமண்டர் செளகானின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது!!
கர்நாடக மாநிலம் கர்வாரில் உள்ள துறைமுக பகுதியில் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த போர் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். INS விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிர் தியாகம் செய்த, லெப்டினன்ட் காமண்டர் செளகானின் உடல், அவரது சொந்த ஊரான, மத்திய பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டது.
விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள துறைமுகத்திற்கு, கடந்த வெள்ளிக்கிழமை வந்தது. அப்போது, அதன் ஒருபகுதியில், தீப்பற்றியது. கடுமையான புகைமண்டலத்துடன் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது, மூர்ச்சையாகி, லெப்டினன்ட் காமண்டர் DS செளகான் உயிரிழந்தார்.
செளகானின் உடல், கடற்படையினரின் அஞ்சலிக்குப் பிறகு, அவரது சொந்த ஊரான, மத்திய பிரதேசத்தின், ராட்லம் நகருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
Madhya Pradesh: Mortal remains of Indian Navy's Lieutenant Commander DS Chouhan who lost his life during fire fighting operations on-board aircraft carrier INS Vikramaditya in Karwar, Karnataka, yesterday, brought to his home in Ratlam. pic.twitter.com/evAUJRkxZZ
— ANI (@ANI) April 28, 2019