‘மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மும்பை வாசிகளை எச்சரிக்கும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்!!
மும்பையில் கனமழை காரணமாக பஸ், ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.தொடர்ந்து பெய்து வரும் மழையால் சியான், மதுங்கா, டாஹிம், அந்தேரி, மலாட் மற்றும் தஹிகார் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சயான், செம்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வானிலை மோசமாக காணப்படுவதால்ல் 17 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் 11 விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாத்லாபூர், தாணே, நவி மும்பை ஆகிய பகுதிகளில் 24 மணி நேரத்தில் 219 மி.மீ. மழை பெய்துள்ளது. மும்பையில் கனமழை பெய்துள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்கள் தண்ணீர் தேங்கியுள்ளதால் உள்ளூர் ரயில் சேவை வழக்கம் போல் இயங்கி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தானே, ராய்காட், பால்கர், மும்பை ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபபட்டுள்ளது. அது போல் கொங்கன், கோவா, குஜராத் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும்.