மக்களவை இடைக்கால சபாநாயகராக விரேந்திர குமார் தேர்வு!

பாஜக பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர குமார் கட்டிக் மக்களை இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

Last Updated : Jun 11, 2019, 01:28 PM IST
மக்களவை இடைக்கால சபாநாயகராக விரேந்திர குமார் தேர்வு! title=

பாஜக பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர குமார் கட்டிக் மக்களை இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மத்திய பிரதேச மாநிலம் திகம்ஹர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மக்களவை உறுப்பினர் வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று அதீத பெரும்பான்மையுடன், பாஜக ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இதனையடுத்து பிரதமர் மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்றார். 

இதனிடையே, 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் 2 நாளில் புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். 19–ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். 20–ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 26–ஆம் தேதி கூட்டத்தொடர் முடிகிறது. 

இந்நிலையில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் திகம்ஹர் மக்களவை தொகுதியில் இருந்து வீரேந்திர குமார் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக 11, 12, 13 மற்றும் 14-வது மக்களவை தேர்தலில் மத்திய பிரதேசத்தின் சாகர் தொகுதியில் இருந்தும். 15, 16-வது மக்களவை தேர்தலில் திகம்ஹர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Trending News