Karnataka Election 2023: கர்நாடக தேர்தலில் ஹனுமானுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் கைங்கர்யம்

Jai Hanuman In Karnataka Election 2023: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘பாவத்திற்கான பலனை’ கர்நாடக மக்கள் கொடுப்பார்கள் என விஎச்பி சாபம் கொடுப்பது ஏன்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 4, 2023, 07:21 PM IST
  • கர்நாடக தேர்தலில் ஹனுமானுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் கைங்கர்யம்
  • ஹனுமான் சாலிசா பாராயணத்தை நடத்திய பாஜக
  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கர்நாடகாவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களை மேம்படுத்தும்
Karnataka Election 2023: கர்நாடக தேர்தலில் ஹனுமானுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் கைங்கர்யம் title=

Karnataka Election 2023: பாஜகவின் ‘பஜ்ரங் பலி’ கோஷத்தால் அரண்டு போன காங்கிரஸ், கர்நாடகாவில் ‘ஆஞ்சநேயா’ பாதையில் செல்ல முயல்கிறது. தேர்தல் வாக்குப்பதிவுக்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாநிலத்தில் ஹனுமான் சாலிசா பாராயணத்தை பாஜக நடத்தியது.

அனுமானின் ஆசீர்வாதம் பாரதிய கட்சிக்கு போய்விட்டால் என்ன செய்வது என்று காங்கிரஸ் கட்சி யோசித்தது. அதையடுத்து, கர்நாடக  காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களை மேம்படுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே. சிவக்குமார் உறுதியளித்துள்ளார்..

இப்படி ஹனுமான் பெயரைச் சொல்லி வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் முயற்சித்து வரும் நிலையில், கர்நாடகா தேர்தல் ஒரு அசாதாரண கட்டத்தை எட்டியுள்ளது. பஜ்ரங் தளத்தை தடை செய்வது தொடர்பாக காங்கிரஸ் சொன்னதற்கு தக்க பதிலடி கொடுத்தது. அனுமான் சாலிசா பாராயணம் மூலம், பா.ஜ.க, காங்கிரசுக்கு அடி கொடுத்தால், ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் உள்ள ஹனுமான் கோவில்களை அபிவிருத்தி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

மேலும் படிக்க | போர்க்களமாய் பரபரப்பின் உச்சத்தில் கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்! வெற்றி யாருக்கு?

மாநிலத்தில் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறும், ஏப்ரல் 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதுவரை அனுமான் சாலிசா, கோவில் மேம்பாடு, பஜ்ரங்தள் தடை என தினம் ஒரு யுக்திகளை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்

ஆட்சிக்கு வந்தால், ஆஞ்சநேயர் கோயில்களை மேம்படுத்துவோம் என்று கூறிய காங்கிரஸ் வேட்பாளர் டி.கே சிவக்குமார், காங்கிரஸ் கட்சிம் மாநிலம் முழுவதும் உள்ள அனுமார் கோவில்களை மேம்படுத்துவதோசு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய ஆஞ்சநேயர் கோவில்கள் கட்டுவதற்கு கட்சி முன்னுரிமை அளிக்கும், என்று தெரிவித்தார்.

மைசூரில் சாமுண்டீஸ்வரி கோவிலில் டிகே சிவகுமார்.

அஞ்சனாத்ரி மலையின் வளர்ச்சியை கண்காணிக்கவும், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் காங்கிரஸ் சிறப்பு வாரியத்தை அமைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவக்குமார் கூறினார்.

மேலும் படிக்க | Aliens: மொபைல் டவர்கள் மூலம் ஏலியன்கள் நம்மை கண்டறியலாம்: ஆய்வு தரும் அதிர்ச்சி

மைசூரில் சாமுண்டேஸ்வரி ஆலயத்திற்கு சென்ற அவர், "ஆஞ்சநேயரின் கொள்கைகள் மற்றும் விழுமியங்களைப் பற்றி இளைஞர்களுக்குக் கற்பிக்கும் நோக்கில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நாங்கள் ஏற்பாடு செய்வோம்" என்று பாஜகவின் 'ஹனுமான் சாலிசா' பாராயணத்திற்கு பதிலடி கொடுத்தார்.

நேற்று முன்தினம், கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மக்கள், 'கறுப்பு கலாச்சாரத்தை' ஆதரிக்க வேண்டாம் என்றும், வாக்களிக்கும்போது 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கூற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பஜ்ரங் தளம் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக சொன்ன காங்கிரஸுக்கு எதிராக பா.ஜ.க. கர்நாடக பாஜக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை எரித்தார். மேலும், பஜ்ரங் தளத்தை தேசியவாத அமைப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | நட்சத்திர பிரச்சாரகர்கள் ‘நாவடக்கத்தை’ கடைபிடிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

விஜயநகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, அனுமனை வழிபடுபவர்களை காங்கிரஸார் அடைத்து வைக்க முயற்சிப்பதாக சொல்லி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியிருந்தார்.

பஜ்ரங்தளை இழிவுபடுத்தியதன் மூலம் காங்கிரஸ் கட்சி பாவம் செய்துவிட்டது என்று கூறிய விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மே 10ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘பாவத்திற்கான பலனை’ கர்நாடக மக்கள் கொடுப்பார்கள் என்று விஎச்பி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் விஎச்பி வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பி.டி உஷா! முதலில் நான் ஒரு வீராங்கனை பிறகே நிர்வாகி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News