ஜம்மு-காஷ்மீரில் பாஜக உடன் இணைந்து செயல்பட்ட நபரை வீடு புகுந்து கடத்திச் சென்ற தீவிரவாதிகள், அவரை சுட்டுக்கொலை செய்து உடலை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!
ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பதான் பகுதியைச் சேர்ந்த சபீர் அகமது என்பவர், பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த அவர், வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர் சபீர் அகமதுவை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Jammu and Kashmir: Shabir Ahmad Bhat, who is affiliated with the Bharatiya Janata Party (BJP), was shot dead by terrorists at around 2:30 am today at his home in Pulwama's Rakh-e-litter. pic.twitter.com/30ALqDerat
— ANI (@ANI) August 22, 2018
இது தொடர்பாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில், சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராக் லிட்டெர் என்ற பகுதியில் குண்டுகளால் துளைக்கப்பட்ட சபீர் அகமது உடலை போலீசார் கண்டெடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.