Bihar News In Tamil: நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைந்து முதல்வராகா பதவியேற்றார். இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் அரசுக்கு ஆதரவாக 129 வாக்குகள் அளிக்கப்பட்டன. 129 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது மற்றும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். அதேநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு பூஜ்ஜிய வாக்குகளே கிடைத்தன.
பெரும்பான்மை 122 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் பாஜக-ஜேடி(யு) கூட்டணிக்கு 128 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பீகார் சட்டசபைக்கு பெரும்பான்மை 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நிதிஷ்குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
மேலும் படிக்க - சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்.. ஆதரவு 125, எதிப்பு 112
நிதிஷ் கூட்டணிக்கு 129 பேரின் ஆதரவு கிடைத்தது எப்படி?
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 128 எம்எல்ஏக்கள் உள்ளனர். சட்டசபை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாரபட்டதால், அந்த வாக்கை நிதிஷ்குமார் கூட்டணி இழந்தது. மறுபுறம் ஒரு எம்எல்ஏ திலீப் ராய் சட்டசபைக்கு வரவில்லை. இந்நிலையில் நிதிஷ்குமார் கூட்டணியின் எண்ணிக்கை 126 ஆக இருந்தது. ஆனால் மூன்று ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்ததால் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது.
பீகார் சட்டமன்ற எண்ணிக்கை நிலவரம்
பீகார் சட்டசபையில், பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்களும், ஜேடியுவுக்கு 45 எம்எல்ஏக்களும், ஜிதன் ராம் மஞ்சியின் ஹெச்ஏஎம் கட்சிக்கு 4 பேரும், ஒரு சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர். அவர்களின் மொத்த எண்ணிக்கை 128.
எதிர்க்கட்சி முகாமில் ஆர்ஜேடி 79, காங்கிரஸ் 19, இடதுசாரி கூட்டணி 16 எம்எல்ஏக்கள் உள்ளனர். அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். அவர்களின் மொத்த எண்ணிக்கை 115. மூன்று ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் அணி மாறியதால், அவர்களின் எண்ணிக்கை 112 ஆக குறைந்தது.
சபாநாயகர் அவாத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன், சட்டசபை சபாநாயகர் அவாத் பிஹாரி சவுத்ரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சபாநாயகருக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 125 எம்எல்ஏக்களின் ஆதரவும், 112 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
ஆர்ஜேடி ஆட்சியில் ஊழல் -நிதிஷ் குமார்
பீகார் மாநிலத்தில் ஆர்ஜேடி கட்சி ஆட்சியின் போது பல ஊழல் செயல்களில் ஈடுபட்டதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று (திங்கள்கிழமை) குற்றம் சாட்டினார். மேலும் இது குறித்து புதிய என்டிஏ தலைமையிலான அரசு விசாரணையைத் தொடங்கும் என்றார்.
இந்தியா கூட்டணியில் விலகி - என்டிஏ கூட்டணியில் இணைந்த நிதிஷ்
பீகார் மாநிலத்தின் மகா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் பீகார் மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைத்தார். கடந்த 15 நாள் ஆட்சிக்கு பிறகு முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு இன்று (திங்கள்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க - பீகார் அரசியல்: நிதிஷ் குமார்-ஆ அல்லது தேஜஸ்வி-ஆ.. ஓவைசி யார் பக்கம்..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ