Petrol-Diesel Price இல் மிகப்பெரிய அப்டேட்! மக்களே உஷார்

நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை (Petrol-Diesel Price Today) அவ்வப்போது விலை உயர்ந்த நிலையில் இயங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2021, 02:38 PM IST
Petrol-Diesel Price இல் மிகப்பெரிய அப்டேட்! மக்களே உஷார் title=

புதுடெல்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை (Petrol-Diesel Price Today) தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் பாக்கெட் பாதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது புகழ்பெற்ற உலகளாவிய நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், வரும் காலத்தில், நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.150 எட்டும் என்று கூறியுள்ளது. 

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் விலை உயரும்
கோல்ட்மேன் சாக்ஸ் சமீபத்திய குறிப்பில், அடுத்த ஆண்டுக்குள், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை (Petrol-Diesel Price) பீப்பாய்க்கு $ 110 ஆக உயரக்கூடும் என்று கூறியுள்ளது. தற்போது, ​​ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 85 டாலர் என்ற அளவில் உள்ளது. இதனால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை (Indian Oil), தற்போதைய விலையை விட, அடுத்த ஆண்டுக்குள், 30 சதவீதம் வரை உயரலாம். கோல்ட்மேன் சாக்ஸின் எண்ணெய் ஆய்வாளர்கள் உலகளாவிய தேவை-வழங்கல் சமநிலையற்றதாகிவிட்டது என்று கூறுகிறார்கள். எனவே அடுத்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை சரிவு! 

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 150 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 140 ரூபாயும் அதிகரிக்கலாம் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கூறுகிறது. தற்போது தலைநகர் டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.94 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.97 ஆகவும் உள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 99 மில்லியன் பீப்பாய்களை தாண்டியுள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் மதிப்பிட்டுள்ளது. விரைவில் இது ஒரு நாளைக்கு 100 மில்லியன் பீப்பாய்கள் என்ற கோவிட்-க்கு முந்தைய அளவைக் கடக்கக்கூடும். 

நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் நடவடிக்கை தொடர்கிறது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை அக்டோபர் 27 புதன்கிழமை மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 35-35 பைசா வரை உயர்த்தியுள்ளன. இந்த உயர்வின் மூலம் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.94 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.67 ஆகவும் உள்ளது. அதே நேரத்தில், மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.113.45 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.104.75 ஆகவும் உள்ளது.

ALSO READ: Cheapest Cars: இந்தியாவின் டாப் 5 மலிவு விலை மின்சார கார்களின் விலை, பிற விவரம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News