Tax Evasion: 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கில் அனில் அம்பானிக்கு பெரும் நிவாரணம்

Anil Ambani vs Tax Evasion: வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி எதிர்கொண்ட வழக்கில் அவருக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 11, 2023, 10:46 AM IST
  • வரி ஏய்ப்பு செய்ததாரா அனில் அம்பானி?
  • கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க தற்காலிகத் தடை
  • அனில் அம்பானி எதிர்கொண்ட வழக்கில் மார்ச் 17 வரை தடை
Tax Evasion: 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கில் அனில் அம்பானிக்கு பெரும் நிவாரணம் title=

 Anil Ambani: வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டுள்ள அனில் அம்பானி மீது கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தள்ளிப் போடப்பட்டுளது. அனில் அம்பானிக்கு எதிராக வெளியிடப்பட்ட நோட்டீஸ் மீது மார்ச் 17ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
வரி ஏய்ப்பு வழக்கு

ரிலையன்ஸ் அடாக் குழுமத்தின் (Reliance ADAG Group) தலைவரான அனில் அம்பானிக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தில் இருந்து கிடைத்துள்ள இந்த செய்தி பெரும் நிவாரணம் அளித்துள்ளது. வரி ஏய்ப்பு செய்ததால் கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானிக்கு எதிராக வெளியிடப்பட்ட நோட்டீஸ் மீது மார்ச் 17ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதால் தற்போது அம்பானி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க கால அவகாசம் கிடைத்துள்ளது.

420 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு

இந்த விவகாரம் தொடர்பாக அனில் அம்பானி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.படேல் மற்றும் நீதிபதி நீலா கோகாய் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. கறுப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரிச் சட்டம், 2015 ஆகியவற்றின் கீழ் அம்பானிக்கு அளிக்கப்பட்ட காரண நோட்டீஸை எதிர்த்து அம்பானி இந்த மனுவை தாக்கல் செய்தார். 

மேலும் படிக்க | Uber: 90 நாட்களுக்கு முன்னரே ஊபர் டாக்ஸியை புக் செய்யலாம்! எப்படி? ரொம்ப ஈஸி

420 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டிய வருமான வரித்துறை, இது தொடர்பாக காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரி ஏய்ப்பு வழக்கு விவரம்
இரண்டு சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ள 814 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கணக்கில் காட்டப்படவில்லை என்று என்று ஆகஸ்ட் 8, 2022 அன்று  வருமான வரித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனுடன், அம்பானி ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அந்த துறை தரப்பில் கூறப்பட்டது.

வருமான வரித்துறை சார்பில் வரி ஏய்ப்பு செய்ததாக அனில் அம்பானி மீது குற்றம்சாட்டப்பட்டதோடு, அவர், தனது வெளிநாட்டு வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நிதி நலன்கள் குறித்து இந்திய வரி அதிகாரிகளுக்கு வேண்டுமென்றே தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பதறவைக்கும் CCTV! தங்கச்சியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட அண்ணனுக்கு நேர்ந்த கதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News