நல்ல செய்தி விரைவில்: PPF வட்டி விகிதங்களை அதிகரிக்க திட்டமா? காத்திருக்கும் மக்கள்

Small Saving Schemes: இந்த காலாண்டில் சில திட்டங்களின் வட்டியை அரசாங்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 16, 2023, 07:19 PM IST
  • சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ், வட்டி காலாண்டு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
  • PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, சிறு சேமிப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
  • இது ஒரு நீண்ட கால முதலீட்டு விருப்பமாகும்.
நல்ல செய்தி விரைவில்: PPF வட்டி விகிதங்களை அதிகரிக்க திட்டமா? காத்திருக்கும் மக்கள் title=

PPF வட்டி விகிதம்: சேமிப்பு என்பது அனைவருக்கும் மிக முக்கியமான பழக்கமாகும். நல்ல வருமானத்தை அளிக்கும் பாதுகாப்பான பல சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இவற்றில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த திட்டங்களின் மூலம் கடினமாக உழைத்து மக்கள் சேர்த்து வைத்த பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நல்ல வருமானத்தையும் ஈட்டித் தருகின்றது.

வட்டி விகிதங்கள்

சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ், வட்டி காலாண்டு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த காலாண்டில் சில திட்டங்களின் வட்டியை அரசாங்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, சிறு சேமிப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகும். இது ஒரு நீண்ட கால முதலீட்டு விருப்பமாகும். மேலும் அதில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்திற்கான ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். இது வரி விதிக்கப்படாத திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

பிபிஎஃப் திட்டத்தின் கீழ் 7.1 சதவீத வட்டியை அரசாங்கம் தற்போது வழங்குகிறது. இதில் முதிர்வு காலம் (maturity period) 15 ஆண்டுகள் ஆகும். மேலும் ஐந்து ஆண்டுகளில் இதை 25 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். PPF திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்சத் தொகை 500 ரூபாய் ஆகும்.

மேலும் படிக்க | அலர்ட் மக்களே.. இந்த தொகைக்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தால் 100% அபராதம்!!

கடந்த சில காலாண்டுகளில், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் ஃபிக்ஸட் டெபாசிட் (FD), RD, NSC மற்றும் பிற திட்டங்களுக்கான வட்டியை அரசாங்கம் அதிகரித்துள்ளது. ஆனால் ஏப்ரல் 2020 முதல் PPF மீதான வட்டி மாறாமல் அப்படியே உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் பிபிஎஃப் திட்டத்தின் வட்டி விகிதத்தை அரசாங்கம் இந்த முறை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக PPF முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இருப்பினும், நிபுணர்களின் கருத்து அப்படி இல்லை. 

ஆகஸ்ட் 2023 இல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல், முன்பு இருந்த விகிதத்தையே நீட்டித்தது. பொருளாதார ரீதியாக பார்த்தால், இந்தியா தொடர்ந்து பணவீக்க பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. PPF, NSC, KVP, SSY போன்ற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை செப்டம்பர் 2023 இறுதியில், குறிப்பாக செப்டம்பர் 29 அல்லது 30 அன்று திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சிறு சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள் (Interest Rates) பொதுவாக காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகின்றன. ஜூன் 30 அன்று கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டதில் பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான விகிதங்களில் மேல்நோக்கி திருத்தம் செய்யப்பட்டது. முன்னதாக, ஏப்ரல்-ஜூன் 2023 காலகட்டத்திலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன.

சிறு சேமிப்புத் திட்டங்கள் (Small Saving Schemes) குடிமக்களிடையே வழக்கமான சேமிப்பை ஊக்குவிக்க அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பல்வேறு சேமிப்புக் கருவிகளை உள்ளடக்கியது. இந்தத் திட்டங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: 

- சேமிப்பு வைப்புத்தொகை (1-3 ஆண்டு கால வைப்பு மற்றும் 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகை உட்பட), 

- சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்றவை) 

- மற்றும் மாதாந்திர வருமானத் திட்டங்கள் (மாதாந்திர வருமானக் கணக்குகள் போன்றவை).

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட் செய்தி: வருகிறது 'வந்தே சாதாரண்' ரயில்.. குறைந்த கட்டணம், அதிக வசதிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News