கட்டுக்கோப்பான உடலா? கட்டாய ஓய்வா? காவலர்களுக்கு கெடுபிடி!!

ஒரிசா காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கோவிட்டுடன் சேர்த்து, புவனேஸ்வர் மற்றும் கட்டாக் ஆகிய இரட்டை நகரங்களில் உள்ள போலீஸ்காரர்களின் வயிற்றைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2020, 06:56 PM IST
  • புவனேஸ்வர்-கட்டாக் போலீஸ் கமிஷனரேட்டின் ஆண் மற்று பெண் காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
  • தொற்றுகளிலிருந்து தப்பிக்க நாம் நம்முடைய உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க வேண்டும்.
  • காவல் துறை வீரர்களும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் முழு முனைப்போடு உள்ளார்கள்.
கட்டுக்கோப்பான உடலா? கட்டாய ஓய்வா? காவலர்களுக்கு கெடுபிடி!! title=

கோவிட்-19 (Covid-19) தொற்றின் அளவை குறைக்க நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் அரசாங்கங்கள் கடுமையாக முயற்சித்து வரும் நிலையில், ஒரிசா காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கோவிட்டுடன் சேர்த்து, புவனேஸ்வர் (Bhuvaneshwar) மற்றும் கட்டாக் ஆகிய இரட்டை நகரங்களில் உள்ள போலீஸ்காரர்களின் (Policemen) வயிற்றைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். தேவையற்ற உடல் பருமனால் கொரோனா மற்றும் பிற தொற்றுகளால் தாக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

புவனேஸ்வர்-கட்டாக் போலீஸ் கமிஷனரேட்டின் ஆண் மற்று பெண் காவல்துறையினருக்கு காவல் துறை ஆணையர் (Police Commissioner) சுதான்ஷு சாரங்கி (Sudanshu Sarangi) ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில் நவம்பர் மாதத்திற்குள் அனைவரும் எடையைக் குறைத்து சரியான வடிவைப் பெறவில்லை என்றால், அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"சேவையில் சேரும்போது, அதிகாரிகள் வேலையின் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதைத் தவிர உடல் பயிற்சியைப் பெறுகிறார்கள், மேலும் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில், பயிற்சி மறக்கப்பட்டு அவர்கள் ஆரோக்கியத்தை கவனிப்பதில்லை. பின்னர் அவர்கள் உயர் / குறைந்த இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உயர் கொழுப்பு போன்ற உடல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். எதிர்காலத்தில் சில புதிய வகையான வைரஸ் தாக்குதல்களும் ஏற்படலாம். இவற்றிலிருந்து தப்பிக்க நாம் நம்முடைய உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க வேண்டும்.”என்று சாரங்கி தனது அறிவிப்பில் புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கின் 7,000 க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களுக்கு தெரிவித்தார்.

ALSO READ: மன வலிமைக்கு சவால் விடும் கொரோனா: சிகிச்சையிலிருந்து தப்பி ஓடிய BSF வீரர்!!

உடல் நிறை குறியீட்டைக் (Body Mass Index) கணக்கிட அனைத்து போலீசாரின் உயரமும் எடையும் அளவிடப்படும் என்றார் சாரங்கி. 30 க்கும் மேற்பட்ட பி.எம்.ஐ உள்ளவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து வழிநடத்தப்படுவார்கள். நவம்பர் மாதத்திற்குள், எந்த ஒரு ஊழியரின் பி.எம்.ஐ 30 க்கு மேல் இருந்தாலும், அவர்கள் ஆறு வார புதுப்பிப்பு வகுப்பில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும்.

ஆணையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு சம்பள உயர்வு குறைக்கப்படலாம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்படலாம்.

ஒரிசா போலீஸ் சங்கம் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கான நேரமும் கிடைப்பதில்லை என சில காவல்துறையினர் கூறி வருகின்றனர். கொரோனா காலத்தில் காவல் துறையினர் நேரம் காலம் பார்க்காமல் பணி புரிந்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இருப்பினும் அனைத்து காவல் துறை வீரர்களும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் முழு முனைப்போடு உள்ளார்கள். 

Trending News