Bharat Jodo Nyay Yatra, Congress: இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நான்காவது நாளான இன்று நாகாலாந்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பயணம் செய்து வருகிறார். இதற்கிடையில் நாகாலாந்து மக்கள் மத்தியில் பேசும் போது, "நாகா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். அமைதி உடன்படிக்கைக்கு தீர்வு காணவில்லை என்றால் பிரதமர் மோடி பொய் சொல்லியிருக்கக் கூடாது என்றும், பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் உங்கள் மொழியை அவமதிக்கின்றன. 9 ஆண்டுகளுக்கு முன்பு நாகா சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றாதது குறித்து நான் வெட்கப்படுகிறேன் என்றார் ராகுல் காந்தி.
நான் வெட்கப்படுகிறேன் -ராகுல் காந்தி
நாகாலாந்தின் மோகோக்சுங்கில் அமைதி ஒப்பந்தம் குறித்து மக்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Rahul Gandhi), "இந்திய பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளுக்கு முன்பு நாகாலாந்து மக்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு, இன்னும் அதை நிறைவேற்றவில்லை என்பதற்காக வெட்கப்படுகிறேன். உங்களிடம் தீர்வு இல்லை என்றால், நீங்கள் அதைப் பற்றி பொய் சொல்லக்கூடாது என்று ராகுல் கூறினார்.
மேலும் படிக்க - "மோடி அரசியல் விழா" ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஏன் செல்லவில்லை -ராகுல் விளக்கம்
அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை அவசியம் -ராகுல் காந்தி
பாரத் ஜோடோ நியாய யாத்திரை (Bharat Jodo Nyay Yatra) திங்கள்கிழமை (ஜனவரி 15) மாலை நாகாலாந்து சென்றடைந்தது. நாகா தலைவர்களுடன் பேசியுள்ளேன் என்று ராகுல் கூறினார். அமைதி ஒப்பந்தம் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதற்கு காரணம் அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. நாகாலாந்து மக்களுடன் பேசாமல் தீர்வு காண முடியாது. பிரதமர் மோடி தீர்வு குறித்து என்ன நினைக்கிறார் என்பது கூட எங்களுக்கும் தெரியாது. தீர்வை நோக்கி செல்வதற்கு, உரையாடல் அவசியம், ஒருவரையொருவர் கலந்து ஆலோசிக்க வேண்டும், அப்பொழுது தான் பிரச்சனை சரி செய்ய முடியும் என்றார்.
ராகுல் காந்தியை சந்தித்த நாகா ஹோஹோ அமைப்பு
நாகாலாந்தின் மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்புகளில் ஒன்றான நாகா ஹோஹோ, ராகுல் காந்தியை சந்தித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு கையெழுத்தான நாகா அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்படாதது குறித்து ராகுலிடம் அந்த அமைப்பு தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளது.
2015 உடன்படிக்கையின் கீழ் தீர்மானிக்கப்பட்ட கட்டமைப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ராகுலிடம் நாகா ஹோஹோ அமைப்பினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. நாகாலாந்து மக்களுக்கு நீதி வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அமைப்பிடம் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவில் கருத்தியல் போர் நடந்து வருகிறது -ராகுல் காந்தி
நான் இங்கு (நாகாலாந்து) வரும் போது, வழியில் உங்கள் கலாச்சாரம் மற்றும் உங்கள் வாழ்க்கை முறையை பார்த்தேன். உங்கள் வரலாறு மிகவும் வளமானது. ஆனால் தற்போது இந்தியாவில் கருத்தியல் போர் நடந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் (Rashtriya Swayamsevak Sangh) மற்றும் பிஜேபி (Bharatiya Janata Party) இந்தியாவின் அனைத்து கலாச்சாரங்களையும் அழித்து வருகின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போலவே வடகிழக்கு மாநிலங்களும் முக்கியமானவை என்பதை எங்கள் பயணத்தின் மூலம் தெரிவிக்க விரும்புகிறோம். இங்கு மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி, முக்கியத்துவம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.
நாகா மொழியை அவமதிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் -ராகுல் காந்தி
நான் இங்கு உரை நிகழ்த்த வரும்போது இங்குள்ளவர்களுக்கு ஆங்கிலம் புரியும் என்று கூறினார்கள். இது நல்ல விஷயம். ஆனால் இந்த உரையை நாகமிஸ் மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஏனெனில் இது உங்கள் பேச்சு மொழி. இதே மொழியைத்தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வும் தாக்கி அவமானப்படுத்துகின்றன என்று காங்கிரஸ் (Indian National Congress) எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - INDIA கூட்டணியால் சிதறும் காங்கிரஸ்... தொகுதி பங்கீட்டால் பலத்த அடி... தீர்வு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ