மக்களுக்கு ஒரு நற்செய்தி... Covaxin இரண்டாம் கட்ட சோதனைக்கு ஒப்புதல்!!

PGI Rohtak துணைவேந்தர் டாக்டர் ஓ.பி. கல்ரா, தனது தடுப்பூசி பரிசோதனையின் இரண்டாவது சோதனை சுற்றைத் தொடங்க பாரத் பயோடெக்கிலிருந்து அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 8, 2020, 08:37 AM IST
மக்களுக்கு ஒரு நற்செய்தி... Covaxin இரண்டாம் கட்ட சோதனைக்கு ஒப்புதல்!! title=

PGI Rohtak துணைவேந்தர் டாக்டர் ஓ.பி. கல்ரா, தனது தடுப்பூசி பரிசோதனையின் இரண்டாவது சோதனை சுற்றைத் தொடங்க பாரத் பயோடெக்கிலிருந்து அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்!!

இந்தியாவில் உள்ளவர்களுக்கு விரைவில் கோவிட் -19 தடுப்பூசி (Covid-19 vaccine) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்களின் இதற்கான சோதனை வேகமாக நடந்து வருகிறது. இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பாரத் பயோடெக்கின் (Bharat Biotech) கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது சுற்று மனிதர்களுக்கான சோதனையை முயற்சி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாம் கட்ட சோதனைகளில் கோவாக்சின் பாதுகாப்பான மற்றும் பக்க விளைவு இல்லாதது என நிரூபணமாகியுள்ளது. 

கோவாக்சின் பல்வேறு மையங்களில் இரண்டாம் கட்ட சோதனைகளைத் தொடங்க ஆராய்ச்சியாளர்கள் தயாராகி வருவதால் இந்த அறிக்கை வந்துள்ளது. இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் எஸ்.யூ.எம் மருத்துவமனையின் மருத்துவர்கள், மருத்துவ அறிவியல் பீடம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து புரேவின் தேசிய வைராலஜி நிறுவனம், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் உருவாக்கிய தடுப்பு மருந்தின் பரிசோதனை மூலம் பரிசோதிக்கப்பட்ட தன்னார்வலர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ALSO READ | நற்செய்தி... கொரோனா தடுப்பூசி இந்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும்..!

ஆரம்பகட்ட சோதனைகள் பாதுகாப்பானவை என முடிவுகள் காட்டுகின்றன. சோதனைகளை நடத்துவதற்கு போருப்பெற்றுள்ளவர்களில் ஒருவரான டாக்டர் E.வெங்கட ராவ் கூறுகையில், தன்னார்வலர்கள் மருந்து பெற்றவுடன், வைரஸுக்கு  எதிரான ஆன்டிபாடிகளின் உற்பத்தி ஏற்பட்டுள்ளதைப் கண்டுள்ளனர். தடுப்பு மருந்து வழங்கப்பட்ட பிறகு தன்னார்வலர்கள் எந்த பக்க விளைவுகளையும் சந்திக்கவில்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

கோவாக்சின் பக்க விளைவு இல்லாதது என்ற அறிக்கைகள் உண்மையில் ஒரு நல்ல செய்தி. ஒரு தடுப்பு மருந்து பரிசோதனையின் ஆரம்ப கட்டங்களில் பக்க விளைவுகள் ஏற்படுவது பொதுவானது. விஞ்ஞான ரீதியாக, தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டதற்கு பிறகான ஒரு “ரியாக்டோஜெனிக்” விளைவைக் ஏற்படுத்தக்கூடும், அதாவது, பங்கேற்பாளர்கள் லேசான அறிகுறிகளையோ அல்லது குறுகிய கால அசௌகரியங்களையோ பெறுவார்கள். லேசான வலி, தலைச்சுற்றல், காய்ச்சல், சோர்வு, தசை வலி, புண்கள் மற்றும் குளிர் போன்ற அறிகுறிகளையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும்.

கோவாக்சின் வெகுஜன உபயோகத்திற்கு பாதுகாப்பானது மற்றும் SARS-COV-2 வைரஸைத் தடுக்கிறது. இரண்டாம் கட்ட சோதனைகளின் முடிவுகள் சரியாக வருமானால், மூன்றாம் கட்ட சோதனைகள் தடுப்பு மருந்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.

Trending News