மக்களே உஷார், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம்

மும்பையில் இனி பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம் விதிக்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 2, 2021, 08:34 AM IST
  • பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை
  • எச்சில் துப்பினால் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது
  • பராத தொகையை ரூ.1,200 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டம்
மக்களே உஷார், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம் title=

பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது மும்பை மாநகராட்சி (BMC) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் எச்சில் துப்பினால் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்பட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த அபராத (Spitting) தொகையை ரூ.1,200 ஆக அதிகரிக்க மும்பை (Mumbai) மாநகராட்சி திட்டமிட்டுள்ளளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், அபராதத்தை அதிகரிக்கும் திட்டத்துக்கு சமீபத்தில் கமிஷனர் இக்பால் சகால் ஒப்புதல் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

ALSO READ | எச்சில் துப்பினால் ரூ. 500; முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்: தமிழக அரசு

இது மாநில அரசின் ஒப்புதல் பெற்ற பின்னரே செயல்படுத்தப்படும் என்று பிஎம்சி அதிகாரி கூறினார். இதை செயல்படுத்த, மும்பை துப்புரவு மற்றும் துப்புரவு பை-சட்டங்கள் 2006 இல் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதமாக கடந்த பல ஆண்டுகளாக ரூ.200 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு மனு தொடர்பான விசாரணையின் போது, பொது இடங்களில் அத்துமீறுபவர்கள் மீது போலீசார் ரூ.1,200 அபராதம் விதிக்கும் போது, மாநகராட்சி மட்டும் எச்சில் துப்பினால் ஏன் ரூ.200-ஐ வசூலித்து வருகிறது என மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது. ஆனால் அபராதத்தை அதிகரிக்க மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிடவில்லை. மேலும் கடந்த 6 மாதத்தில் மும்பையில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களிடம் இருந்து ரூ.28 லட்சத்து 67 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் அதிகபட்சமாக குர்லா, சாக்கிநாக்கா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய எல் வார்டில் ரூ.4¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News