இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் கைது: காவி உடையில் இருந்த கயவனை பிடித்த காவல்துறை

காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட போது பொலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 14, 2022, 01:15 PM IST
  • காதலை ஏற்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர்.
  • திருவண்ணாமலை ஆசிரமத்தில் தலைமறைவாக இருந்தார்.
  • வளைத்து பிடித்து கைது செய்தது காவல்துறை.
இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் கைது: காவி உடையில் இருந்த கயவனை பிடித்த காவல்துறை  title=

இளம்பெண் மீது திராவகம் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார். 16 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் பதுங்கி இருந்தபோது சிக்கினார்

காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட போது பொலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை அவரது அலுவலகத்திற்கு சென்றும், அவரது வீட்டிற்கு சென்றும் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.  

கடந்த மாதம் 28 ஆம் தேதி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என்று மிரட்டியதுடன் அந்த னபர் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் நாகேஷின் காதலை ஏற்றுக்கொள்ளாத இளம்பெண் மீது நிதி நிறுவனம் முன்பு வைத்து பையில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து நாகேஷ் வீசி விட்டு தப்பித்து தலைமறைவானார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் உயிருக்கு போராடினார். இதன்பின்னர் அந்த இளம்பெண் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மேலும் படிக்க | மைலாப்பூர் இரட்டை கொலை - குற்றவாளிகளை விசாரிக்க 5 நாள் போலீஸ் காவல்..!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து நாகேஷை தீவிரமாக தேடி வந்தநிலையில், குற்றவாளியின் புகைப்படம் அடங்கிய தகவல்கள் அனைத்து இடஙளுக்கும் அனுப்பப்பட்டன. இது குறித்து திருவண்ணாமலை நகரம் கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் நோட்டீஸ் ஒடி தேடும் பணி மும்முரமாக நடந்தது. 

இந்த நிலையில் கிரிவலப்பாதையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் குற்றவாளி அடிக்கடி தியானத்திற்கு வருவதாக தகவல் கிடைத்தது.

கிடைத்த ரகசிய தகவலின்படி இன்று போலீசார் மாற்று உடையில் தியான மண்டபத்திற்குள் நுழைந்து காவி உடை வேடம் அணிந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த குற்றவாளியான நாகேஷை கைதுசெய்து கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க | ஒரே ஒரு போட்டோவை போட்டு 2 போலீஸ்காரர்களை அலறவிட்ட கைதியின் உறவினர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News