போட்டிக்கு இடையில் பறந்த விமானம் குறித்து BCCI வழக்குப்பதிவு!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியின் போது, காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற பேனர் விமானம் மூலம் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பாக BCCI வழக்கு தொடர்ந்துள்ளது!

Last Updated : Jul 7, 2019, 04:04 PM IST
போட்டிக்கு இடையில் பறந்த விமானம் குறித்து BCCI வழக்குப்பதிவு! title=

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியின் போது, காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற பேனர் விமானம் மூலம் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பாக BCCI வழக்கு தொடர்ந்துள்ளது!

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் நேற்று இந்தியா - இலங்கை அணிகளுக்க இடையே போட்டி நடைப்பெற்ற போது காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற பேனர் விமானம் மூலம் பறக்க விடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ICC நிற்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ICC துணையுடன் BCCI வழக்கு தொடர்ந்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் 29-ஆம் தேதி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது மைதானத்துக்கு மேலே, "பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்" என்ற பேனரை சுமந்தபடி விமானம் ஒன்று பறந்தது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியின் போது விமானம் மூலம், பேனர் பறக்க விடப்பட்டது.  குறிப்பிட்ட இந்த விமானத்தில் காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற பேனர் பறக்கவிடப்பட்டது.

இதற்கு ICC கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. இதுபற்றி ICC விடுத்துள்ள அறிக்கையில், விமானத்தின் மூலம் அரசியல் பேனர்களை விடும் சம்பவம் மீண்டும் நடந்துள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். உலகக் கோப்பை தொடரில் எந்த அரசியல் கோஷங்களையும் ஆதரிப்பதில்லை.

இந்த தொடர் முழுவதும் காவல்துறை உதவியுடன் இதுபோன்ற அரசியல் எதிர்ப்புகளை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதற்கு முன் நடந்த சம்பவத்தின்போது மேற்கு யார்க், ஷையர் போலீசார், இனி இப்படி நடக்காது என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் மீண்டும் இப்படி நடந்திருப்பது அதிருப்தியை அளிக்கிறது என குறிப்பிட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தியா - இலங்கை போட்டியின் போது நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக BCCI வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News