11 நாட்கள் கடுமையான விரதத்தில் பிரதமர் மோடி... ஆகாரமாக 2 வேளை இளநீர் மட்டுமே

Ayodhya Ram Temple: ஒரு நாளில் இரு முறை மட்டும் இளநீர் அருந்தினாலும், பிரதமர் முகத்திலோ, செயல்பாடுகளிலோ எந்த சோர்வையும் காண முடியவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 21, 2024, 04:18 PM IST
  • பிரதமர் மோடி ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை செய்யவுள்ளதால், அதற்கான சில நியமங்களையும் அவர் கடைபிடித்து வருகிறார்.
  • அவர் விரதத்தில் உள்ள இந்த 11 நாட்களில் வெறும் தரையில், மெத்தை, தலையணை இல்லாமல், வெறும் போர்வையை போர்த்திக்கொண்டு உறங்குகிறார்.
  • மேலும் அவர் கடுமையான விரத முறையையும் மேற்கொண்டு வருகிறார்.
11 நாட்கள் கடுமையான விரதத்தில் பிரதமர் மோடி... ஆகாரமாக 2 வேளை இளநீர் மட்டுமே title=

Ayodhya Ram Temple: அயோத்தி நகரில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில் ஜனவரி 22 ஆம் தேதி, அதாவது நாளை ராமரின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவிற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் தலைவர் என்ற பொறுப்பில் பங்கேற்று பிராண பிரதிஷ்டை செய்யவுள்ளார். இதற்காக ஜனவரி 12 முதல் 11 நாட்களுக்கு அவர் விரதத்துடன் நோன்பிருந்து பூஜைக்கான விதிமுறைகளை கடைபிடித்து வருகின்றார். 

பிரதமர் மோடி (PM Modi) அவர்கள் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை செய்யவுள்ளதால், அதற்கான சில நியமங்களையும் அவர் கடைபிடித்து வருகிறார். அவர் விரதத்தில் உள்ள இந்த 11 நாட்களில் அவர் வெறும் தரையில், மெத்தை, தலையணை இல்லாமல், வெறும் போர்வையை போர்த்திக்கொண்டு உறங்குகிறார். மேலும் அவர் கடுமையான விரத முறையையும் மேற்கொண்டு வருகிறார். நாள் முழுவதும் அவர் இளநீரை மட்டுமே ஆகாரமாக உட்கொள்கிறார்.

பிராண பிரதிஷ்டை: பிரதமர் மோடி பின்பற்றும் விதிகள்

பிராண பிரதிஷ்டை (Ram Temple Pran Pratishta) பூஜை தொடர்பான அனைத்து விதிகளையும் பிரதமர் மோடி பின்பற்றி வருகிறார். இந்த விதிமுறைகளின் கீழ், ஒரு சிறப்பு 'சாத்வீக' உணவை உட்கொள்ள வேண்டும். இந்த உணவில், வெங்காயம், பூண்டு மற்றும் இன்னும் பல பொருட்களை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விரத நாட்களில் பிரதமர் மோடி (PM Modi) ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே இளநீர் அருந்துகிறார். 

ஒரு நாளில் இரு முறை மட்டும் இளநீர் (Coconut Water) அருந்தினாலும், பிரதமர் முகத்திலோ, செயல்பாடுகளிலோ எந்த சோர்வையும் காண முடியவில்லை. சொல்லப்போனால், இந்த நாட்களில் தான் அவர் வழக்கத்தை விட இன்னும் அதிக பயணங்களை மேற்கொண்டு பல மாநிலங்களில் உள்ள கோவிலக்ளுக்கு சென்றுகொண்டு இருப்பதை நாம் கண்டு வருகிறோம். ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் ஆகிய கோயில்களுக்கு அவர் சென்றதையும், இராமேஸ்வரத்தில் அவர் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ததையும் நாம் பார்த்தோம். 

இது மற்றவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. பசிக்கு உண்ணாமல், ருசிக்கு உண்டு, அதுவும் சுவைக்கு அடிமையாகி பல வித ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டு நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். இப்படிப்பட்ட தருணங்களில் பிரதமர் மோடி போன்றவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் பல உள்ளன. 

மேலும் படிக்க | அன்னதானத்திற்கு 50 கோடி ரூபாய் கொடுத்தாரா பிரபாஸ்? இல்லைப்பா இல்லை! ஆனா...

விரத நாட்களில் பிரதமர் மோடியை சுறுசுறுப்பாக இருக்க வைக்கும் இளநீரின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே காணலாம். 

இளநீரின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Coconutr Water)

செரிமானத்தை மேம்படுத்தும்

இளநீர் குடிப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இதனை உட்கொள்வதால், செரிமான மண்டலம் நன்றாக இருப்பதோடு, வயிற்றில் எரியும் உணர்வு, குடலில் வீக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு, அல்சர் போன்ற பிரச்சனைகளின் பயம் வெகுவாக குறைகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

இளநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இவை உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து விடுவிக்கின்றன. இதை குடிப்பதன் மூலம், சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியமும் பெரிய அளவில் மேம்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இளநீர் உட்கொள்வதால் உடலுக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கின்றன. இதை குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் இளநீர் குடிப்பவர்களுக்கு நோய் பயம் குறையும்.

இதயத்திற்கு நல்லது

இந்த பானம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதை உட்கொள்வது கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுவது மட்டுமின்றி இரத்தம் உறைவதையும் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் பயமும் குறைகிறது.

மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு எவ்வளவு செலவானது? நீங்கள் அறியாத தகவல்கள் இதோ!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News