ஜம்மு, இமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவு எச்சரிக்கை

ஒரு நடுத்தர ஆபத்து பனிச்சரிவு எச்சரிக்கை, ஜம்மு காஷ்மீர் சில இடங்களில் பனிச்சரிவு பாதிப்புக்குள்ளாகும் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Last Updated : Jan 8, 2017, 11:24 AM IST
ஜம்மு, இமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவு எச்சரிக்கை title=

ஸ்ரீநகர்: ஒரு நடுத்தர ஆபத்து பனிச்சரிவு எச்சரிக்கை, ஜம்மு காஷ்மீர் சில இடங்களில் பனிச்சரிவு பாதிப்புக்குள்ளாகும் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை சண்டிகர் சார்ந்த பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு அமைப்பு (SASE) பிறப்பித்தது.

பாரமுல்லா, குப்வாரா, பண்டிபோரா, கிஷ்த்வார், ரஜோரி, தோடா, பூஞ்ச் ​​மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ரியாசி மாவட்டங்களில் பனிச்சரிவு எச்சரிக்கை பனிச்சரிவு ஆய்வு அமைப்பால் தரப்பட்டுள்ளது.

காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்கள் சிலவற்றில் பனிப்பொழிவு கடுமையாக இருந்து வருகிறது. இதனால் வீடுகள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் உறைபனியே மூடியே காணப்படுகிறது.

இமாச்சல பிரதேச மாவட்டமான சம்பா, கின்னார் மற்றும் லாஹவுல் ஸ்பிதி பகுதிகளில் நடுத்தர ஆபத்து பனிச்சரிவு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை நாளுக்கு நாள் மிகவும் மோசமாடைந்து வருகிறது. 

மின்சாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Trending News