டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்கிழமை இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இன்று மாலை லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தான் பதவி விலகுவதாக கடிதத்தை சமர்ப்பிக்கிறார். அதற்கு முன், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கெஜ்ரிவால் தனது கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் இன்று கூட்டம் நடத்த உள்ளார். இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் புதிய முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்களுடன் கெஜ்ரிவால் முக்கிய பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.
மேலும் படிக்க | டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்?
ஒவ்வொரு தலைவர்களிடமும் தனித்தனியாகப் பேசி அவர்களின் எண்ணங்களை தெரிந்து கொண்டுள்ளார். இதன் அடுத்தகட்ட விவாதம் இன்று நடைபெற உள்ளது. இதில் அனைத்து எம்எல்ஏகளும் கலந்து கொள்வார்கள் என்று சௌரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக கட்சித் தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் ராகவ் சதா ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து அடுத்த முதல்வர் யார் என்று பேசினர். தனக்கு பிறகு யார் பொறுப்பேற்பது என்பது பற்றி கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் ராகவ் சதா கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கெஜ்ரிவால் அடுத்து என்ன செய்வார் என்று மற்ற கட்சிகள் யூகித்துக் கொண்டிருந்தன. எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் இது அவரை நல்லவராக காட்டி கொள்ள நடத்தப்படும் நாடகம் என்றும், இது வெறும் PR ஸ்டண்ட் என்றும், இது சீரியஸாக இல்லை என்று கூறினார். மதுபானக் கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பிறகு, சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கட்சியில் உள்ள அனைவரிடமும் கூறினார். புதிய தலைவர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்வோம் என்றும் தெரிவித்து இருந்தார். "மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வரை முதல்வர் நாற்காலியில் இருக்க விரும்பவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன். போலி குற்றசாட்டுகளை எதிர்த்து வீடு, தெருவாகச் செல்வேன்" என்று கூறி இருந்தார்.
மேலும் டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அவரது X தளத்தில், " நான் நேர்மையானவன் என்று மக்கள் நம்பினால் மட்டுமே டெல்லியின் துணை முதல்வராக மீண்டும் வருவேன். கடினமாக உழைத்து எனது வேலையை சிறப்பாக செய்துள்ளேன், ஆனால் சிலர் என்னை மோசமாக கெட்டவனாக காட்ட முயற்சி செய்கின்றனர். அரசியலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி என்னை நேர்மையற்றவன் என்று நிரூபிக்க முயற்சிக்கப்பட்டது. இந்த பொய் வழக்குகள் காரணமாக 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். நீண்ட சட்ட போராட்டங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. பதவி ஆசைக்காக நான் இங்கு அரசியலுக்கு வரவில்லை. மக்கள் என்னை நேர்மையானவர் என்று நினைக்கும் வரை பதவி வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனக்கு பதிலாக மனிஷ் சிசோடியா தலைவராக நியமிக்கப்பட மாட்டார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மனீஷிடம் பேசியதாகவும், மக்கள் நேர்மையானவர்கள் என்று நம்பினால் மட்டுமே அவர் அந்த பதவியில் இருக்க ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்தே எங்களது எதிர்காலம் உள்ளது என்று கெஜ்ரிவால் கூறினார். கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த 15 நாட்களுக்குப் பிறகு டெல்லியில் உள்ள அரசு வீட்டை விட்டு வெளியேறுவார் என்று ஆம் ஆத்மி கட்சி கட்சியில் இருந்து கூறப்படுகிறது. மற்ற முக்கிய கட்சி உறுப்பினர்களுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது கெஜ்ரிவால் பதவி விலக முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | நிபா வைரஸால் இந்தாண்டில் 2வது பலி... பள்ளி, கல்லூரிகள் மூடல் - கட்டுபாடுகள் விதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ