CAB மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் அஸ்ஸாம் மக்கள்!

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாமில் வெகுஜன மக்கள் ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளனர்.

Last Updated : Dec 11, 2019, 07:33 PM IST
CAB மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் அஸ்ஸாம் மக்கள்! title=

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாமில் வெகுஜன மக்கள் ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளனர்.

திரிபுரா மற்றும் அசாமில் குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தணிக்க சிவில் நிர்வாகம் மூன்று இராணுவ நெடுவரிசைகளைக் கோரியுள்ளதுடன், அஸ்ஸாமில் பத்து மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளை புதன்கிழமை இரவு 7 மணி முதல் நிறுத்தி வைத்துள்ளது.

திரிபுராவில் - ஜெனரல் ஏரியா காஞ்சன்பூர் மற்றும் ஜெனரல் ஏரியா மனுவில் இரண்டு நெடுவரிசைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மூன்றாவது நெடுவரிசை அசாமில் உள்ள பொங்கைகானில் நிலைநிறுத்த காத்திருப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நெடுவரிசையின் தோராயமான வலிமை சுமார் 70 பணியாளர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை (திருத்த) மசோதா, டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன்னர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஆவணமற்ற முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்க முற்படுகிறது.

அசாமில், CAB-க்கு எதிரான ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வெவ்வேறு இடங்களில் தெருக்களில் தோன்றி, காவல்துறையினருடன் கலவரத்தில் ஈடுப்பட்டள்ளுனர். எனினும் எந்தவொரு கட்சியும் அல்லது மாணவர் அமைப்பும் பணிநிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் எதிர்ப்பாளர்கள் செயலகம் முன் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினருடன் கலவரத்தில் ஈடுப்பட்டனர். 

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக லக்கிம்பூர், தேமாஜி, டின்சுகியா, திப்ருகார், சரைடியோ, சிவசாகர், ஜோர்ஹாட், கோலாகாட், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் கம்ரூப் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளை வியாழக்கிழமை 24 மணி நேரத்திற்கு நிறுத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Trending News