உ.பி முதல்வர் யோகி-நடிகர் அக்‌ஷய் குமார் இடையில் நடந்த முக்கிய ஆலோசனை என்ன..!!!

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செப்டம்பர் மாதம், நொய்டாவில் ஒரு பிலிம் சிட்டி அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2020, 01:20 PM IST
  • உத்திரபிரதேசத்தில் நாய்டாவிற்கு அருகில் உள்ள கிரேட்டர் நாய்டாவில், பிரம்மாண்டமான பிலிம் சிட்டி அமைய உள்ளது.
  • அக்‌ஷய் குமார் கடந்த மாதம் தீபாவளி அன்று தனது ராம் சேது படத்தை பற்றி அறிவித்தார்.
  • உத்தரப்பிரதேசத்தின் பிலிம் சிட்டி குறித்து விவாதிக்க யோகி ஆதித்யநாத் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் குழுவை சந்தித்தார்.
உ.பி முதல்வர் யோகி-நடிகர் அக்‌ஷய் குமார் இடையில்  நடந்த முக்கிய ஆலோசனை என்ன..!!! title=

உத்திரபிரதேசத்தில் நாய்டாவிற்கு அருகில் உள்ள கிரேட்டர் நாய்டாவில், பிரம்மாண்டமான பிலிம் சிட்டி அமைய உள்ளது.

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செப்டம்பர் மாதம், நொய்டாவில் ஒரு பிலிம் சிட்டி அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்தார்.  திரைப்பட தயாரிப்பாளர்களும் பாலிவுட் நடிகர்களும் திரைப்பட தயாரிப்புக்காக உத்திர பிரதேச மாநிலத்தை பயன்படுத்திக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார் சமீபத்தில் மும்பையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை (CM Yogi Adityanath) சந்தித்தார். அதன்பிறகு நொய்டாவில் உருவாக்கப்பட உள்ள ஃபிலிம் சிட்டி (Film City)  குறித்து முதல்வருடன்,  சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. ஆனால், மற்றோரு விஷயம் குறித்தும் அவர் ஆலோசனை செய்தார்.

அக்‌ஷய் வரவிருக்கும் 'ராம் சேது' என்ற படம் குறித்தும்  முதல்வருடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

'லக்ஷ்மி' படத்தின் நடிகர் மும்பையின் ட்ரைடன்ட் ஹோட்டலில் முதல்வரை இரவு உணவு விருந்தின் போது சந்தித்தார். அக்‌ஷய் தனது வரவிருக்கும் 'ராம் சேது' படம் பற்றி ஆலோசித்தார், மேலும் அயோத்தியில் (Ayodhya)  தனது படத்தின் படப்பிடிப்பை நடத்த அனுமதி பெற முதல்வர் யோகியை அவர் சந்தித்தார

அக்‌ஷய் குமார் கடந்த மாதம் தீபாவளி அன்று தனது ராம் சேது படத்தை பற்றி  அறிவித்தார். இப்படத்தை அக்‌ஷய் குமார் மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் அபிஷேக் சர்மா.

அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இந்தப் படம் ராம் சேது, அதாவது ராமர் பாலம் கதையை அடிப்படையாகக் கொண்டது. உத்தரப்பிரதேசத்தின் (Uttar Pradesh) பிலிம் சிட்டி குறித்து விவாதிக்க யோகி ஆதித்யநாத் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் குழுவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபாஷ் காய், போனி கபூர், ராஜ்குமார் சந்தோஷி, சுதிர் மிஸ்ரா, ரமேஷ் சிப்பி, டிக்மான்ஷு துலியா, மதுர் பண்டர்கர், உமேஷ் சுக்லா, டி-சீரிஸ் தலைவர் பூஷன் குமார், பென் ஸ்டுடியோவின் ஜெயந்திலால் கடா மற்றும் தயாரிப்பாளர் சித்தார்த் ஆகியோருடன் யு. ராய் கபூர் உட்பட பல திரைப்பட தயாரிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ALSO READ | Bollywood தலைநகரமாகும் உத்திரபிரதேசம்... யோகியின் அதிரடி திட்டம்..!!!
 

Trending News