Article 370 நீக்கப்பட்ட பின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முதல் ஜம்மு காஷ்மீர் பயணம்

பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்வதற்கான உள்துறை அமைச்சரின் கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பவனில் சனிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் தொடங்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2021, 11:09 AM IST
Article 370 நீக்கப்பட்ட பின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முதல் ஜம்மு காஷ்மீர் பயணம் title=

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை (அக்டோபர் 23, 2021) தனது ஜம்மு காஷ்மீர் பயணத்தை தொடங்க உள்ளார். மூன்று நாட்களுக்கான இந்த பயணத்தின் போது, ​​அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்யும் ஒரு கூட்டத்துக்கு ஷா தலைமை தாங்குவார். மேலும், ஜம்மு காஷ்மீர் யூத் கிளப்பின் உறுப்பினர்களுடன் அமித் ஷா காணொலி வாயிலாக உரையாடுவார். ஸ்ரீநகர்-ஷார்ஜா முதல் சர்வதேச விமானத்தையும் உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்வதற்கான உள்துறை அமைச்சரின் கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பவனில் சனிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் தொடங்கும். பின்னர் அவர் மாலை 4:45 மணியளவில் ஜம்மு காஷ்மீர் யூத் கிளப் உறுப்பினர்களுடன் உரையாடுவார். பின்னர் மாலை 6 மணியளவில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஸ்ரீநகர்-சார்ஜா சர்வதேச விமானத்தை அமித் ஷா தொடங்கி வைப்பார்.

இதற்கிடையில், அமித் ஷாவின் (Amit Shah) வருகையையொட்டி காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் செல்லக்கூடும் என கருதப்படும் ஜவஹர் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்திற்கு (SKICC) செல்லும் சாலைகள் சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: பாகிஸ்தான் திருந்தவில்லை என்றால், மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அமித் சா எச்சரிக்கை 

ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) முழுவதும், குறிப்பாக ஸ்ரீநகரில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு டஜன் டவர்களில்,  பெரும்பாலும் கடந்த வாரத்தில் வெளி ஊர்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்ட பகுதிகளில்,  மொபைல் இணைய சேவைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மூன்று நாட்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து, 50 கம்பெனி கூடுதல் துணை ராணுவப் படைகள் ஜம்மு காஷ்மீருக்கு வரவழைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்துசெய்து. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, இது அமித் ஷாவின் முதல் காஷ்மீர் பயணமாகும். 

இதற்கிடியயில், பூஞ்ச் ​​காடுகளில் நடந்து வரும் பயங்கரவாத (Terrorism) எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னணியில், ஒன்பது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைக் கொண்டு செல்ல பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. மற்றும் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

அக்டோபர் 11 அன்று பூஞ்ச் ​​சூரன்கோட் காட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையின் தொடக்கத்தில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஒரு ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (JCO) மற்றும் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். 

அக்டோபர் மாதத்தில் மட்டும், கடந்த இரண்டு வாரங்களில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொதுமக்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ALSO READ: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்; 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News