இன்று கேரளா மாநில கண்ணூரில் நடைபெற்ற கட்சி அலுவலகத்தை திறப்பு விழா மற்றும் பாஜக பேரணியில் கலந்துக் கொண்ட பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, " கேரளாவில் மதநம்பிக்கைகளை காப்பற்ற மாபெரும் போராட்டம் நடத்திய மத நம்பிக்கைகள் கொண்டர்வர்களையும், பி.ஜே.பி. மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் என சுமார் 2,800 பேரை கைது செய்துள்ளது. அவர்கள் மீது அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சபரிமலை பக்கதர்களுக்கு பாஜக மலைபோல நின்று பாதுக்காக்கும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காரணம் காட்டி, பக்கதர்களுக்கு எதிராக கேரளா அரசு செயல்பட வேண்டாம் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதற்க்கு பதிலளித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியது,
"அமித் ஷாவின் பேச்சு ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கு சாதகமாக மட்டும் தான் இருக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை குறித்து எந்தவித கவலையும் இல்லை என்று தெளிவாக தெரிகிறது.
கேரளாவில் எங்கள் ஆட்சியை அகற்றுவோம் என அமித் ஷா கூறியுள்ளார். பா.ஜ.க-வின் ஆதரவால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. கேரள மக்களின் ஆதரவால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். பாஜக-வின் கருணையால் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சபரிமலை குறித்து பிஜேபி தேசிய தலைவர் அமித் ஷாவின் கருத்து அரசியலமைப்பு சட்டத்திற்க்கு எதிரானது எனவும் கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.