உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பாஜக தலைவர் அமித் ஷா, நாளை பாஜக மெகா பேரணியில் கலந்துக்கொள்கிறார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக பாஜகவின் மூத்த தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதி ஆகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பாஜக வட்டராத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தலைவர்களில், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவும் ஒருவர். அவருக்கு உடலில் ஏற்ப்பட்ட நலக்குறைவால், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நலம் சீரான நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்தது. இதனையடுத்து அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.
தனது உடல்நிலை சரியானதை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், கடவுளின் கிருபையுடன், இப்போது நான் ஆரோக்கியமாக உள்ளேன், இன்று நான் மருத்துவமனையில் இருந்து வெளியேறி என் வீட்டிற்கு வந்துள்ளேன். என் உடல்நல நன்மைகளுக்காக, உங்கள் பிராத்தனை மற்றும் வேண்டுதல்களுக்கு இதயபூர்வமான நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் நேற்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக கடந்த 16 ஆம் தேதி, எனக்கு பன்றி காய்ச்சல் இருகிறது. அதற்க்கான சிகிச்சை நடந்து வருகிறது. கடவுளின் கிருபையையும், உங்கள் அன்புமும், வேண்டுதல் மூலமாக விரைவில் குணமாகி வருவேன் என பதிவிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா பகுதியில் நாளை பாஜ சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஒந்த கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க்க உள்ளார். கடந்த சில நாட்களாக பன்றி காய்ச்சல் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு உடல்நலம் சீராகி பேரணியில் பங்கேற்ப்பதால், பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் "ஒற்றுமை இந்தியா மாநாடு" என்று பெயரில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல தலைவர்கள் குறிப்பாக பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் கலந்துக்கொண்டன. இந்த மெகா கூட்டத்தில் பாஜகவை விமர்சித்து கடுமையாக தாக்கி எதிர்கட்சிகள் பேசினார்கள்.
இந்நிலையில், பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டரத்தில் கருதப்படுகிறது.