Surgical Strike Day எனப்படும் துல்லியத் தாக்குதல் தின கொண்டாட்டத்திற்கு அலிகார் முஸ்லீம பல்கலைகழக மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது!
துல்லியத் தாக்குதல் என்பது ராணுவத்தின் தாக்குதல் முறைகளில் ஒன்றாகும். சரியான இராணுவ இலக்கிற்கு மட்டுமே சேதம் விளைவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் ரகசிய தாக்குதல் முறை ஆகும். 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் நாள் இந்திய ராணும் இந்த துல்லியத் தாக்குதல் முறையினை 7 பயங்கரவாத அமைப்புகளின் மீது செயல்படுத்தி எல்லையினை மீட்டெடுத்தனர். அந்த வகையில் செப்டம்பர் 29-ஆம் நாள் துல்லியத் தாக்குதல் தினமாக கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இந்த துல்லியத் தாக்குதல் தினத்தை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி துல்லியத் தாக்குதல் தின கொண்டாட்டம் குறித்த அறிக்கையினை பல்கலை கழுக துணை வேந்தர்கள் சமர்பிக்க வேண்டுமாய் UGC அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து AMU பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் மஷ்கூர் அஹமது உஸ்மானி தெரிவிக்கையில்... துல்லியத் தாக்குதல் என்பது பாஜக கூட்டணியில் முதல்முறையாக நடந்துவிடவில்லை, அதேப்போல் காங்கிரஸ் கூட்டணியிலும் முதல் முறையா நடந்துவிடவில்லை. ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருடம்தோறும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் துல்லிய தாக்குதல் தினம் என்று தனியாக கொண்டாடப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே UGC அறிவிப்பின் கீழ் துல்லியத் தாக்குதல் தினத்தினை கொண்டும் திட்டம் AMU மாணவர் சங்கத்திற்கு இல்லை" என தெரிவித்துள்ளார்.