பாதுகாப்பு காரணமாக போபாலில் அமித் ஷாவின் பிரசாரம் ரத்து...

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவிருந்த பேரணி, உளவுத்துறை எச்சரிக்கையால் திடீரென ரத்து செய்யப்பட்டது.

Last Updated : Nov 19, 2018, 02:14 PM IST
பாதுகாப்பு காரணமாக போபாலில் அமித் ஷாவின் பிரசாரம் ரத்து... title=

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவிருந்த பேரணி, உளவுத்துறை எச்சரிக்கையால் திடீரென ரத்து செய்யப்பட்டது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலங்களில் BJP சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, BJP தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நவம்பர் 28 ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாளை போபாலில் பேரணி நடத்தி வாக்குசேகரிக்க அமித் ஷா திட்டமிட்டிருந்தார். போபால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாத்திமா ரசூல் சித்திக்கை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க இருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி உளவுத்துறை அறிக்கை அளித்தது. இதை அடுத்து இந்த பேரணியானது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News