இந்தியாவின் முப்படைகளில் ஆட்சேர்ப்புக்கான புதிய திட்டமான அக்னிபாத் திட்டம் அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. மேலும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்படுவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே ராணுவத்தில் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்படுவார்கள் என்றும், மீதமுள்ள 80 சதவீதம் பேர் வெளியேற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீதமுள்ள 80 சதவீதம் பேரின் எதிர்காலம் கேள்வி குறி ஆகிவிடும் என்று கருத்து தெரிவித்து வரும் முன்னணி கட்சிகள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வயது வரம்பு 21 ஆக குறைக்கப்பட்டதன் காரணமாக கல்லூரி பயிலும் இளைஞர்கள் பலர் வயது வரம்பை கடந்துவிட்டதாக கருதி கொந்தளித்து போனார்கள். இது நாட்டில் வன்முறைகளை தூண்டியது.
மேலும் படிக்க | மத்திய அரசின் அக்னிபாத் திட்டம்: தகுதி, சம்பளம், இழப்பீடு விளக்கம்
மேலும் முன்னாள் விரர்கள் பலர் ராணுவப் பயிற்சியை சரிவர முடிக்கவே 6-8 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், 4 வருட ஒப்பந்த பணியாளர்களால் நாட்டிற்கும் உபயோகமில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்த திட்டத்திற்கு பீகார் உட்பட நாட்டின் 13 மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய வன்முறை ஆர்ப்பாட்டங்களால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் பாலசூர் பகுதியில் ராணுவ அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் உள்துறை அமைச்சகம் தற்போது, அக்னிபாத் திட்டத்தில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 3 ஆண்டுகள் தளர்த்தியும், முதலாவதாக வரும் ஆண்டு சேர்க்கப்படுவோருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வும் அறிவித்துள்ளது.
அதேபோல் 4 ஆண்டுகளுக்கு பின் வெளியே வரும் அக்னிவீரர்களுக்கு சி.ஏ.பி.எஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் சேர்வதற்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
The Ministry of Home Affairs (MHA) decides to reserve 10% vacancies for recruitment in CAPFs and Assam Rifles for Agniveers.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 18, 2022
மேலும் படிக்க | ரூ. 6 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான 7 சீட்டர் கார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR