சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விண்வெளிப் போட்டி நடந்து வந்தது. சோவியத் யூனியன் நிலவில் தனது லேண்டரை தரையிறக்கியபோது, அமெரிக்கா முதலில் மனிதர்களை அனுப்பியது. 54 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்தான். அமெரிக்கா இதுவரை 12 மனிதர்களை நிலவிற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவை தவிற வேறு எந்த நாடுகளும் மனிதர்களை இதுவரை நிலவிற்கு அனுப்பியது இல்லை. மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்கான முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் இந்தியா தனது பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, நிலவில் மனிதர்களை இந்தியா எப்போது அனுப்பும் என்ற கேள்வியும் ஆர்வமும் எழுந்துள்ளது. ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, இப்போது இந்தியாவும் சந்திரனை இலக்காகக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 23 அன்று நிலவில் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறங்கியதன் மூலம், இந்தியா இன்றுவரை யாராலும் செய்ய முடியாத சாதனையை செய்தது. இந்நிலையில் இந்தியாவால் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் சாத்தியகூறு உள்ளதாக என்ற கேள்வி எழுந்துள்ளது,
இந்தியா எப்போது சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும்? என்பதற்கான பதிலை அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநர் நிலேஷ் தேசாய் வெள்ளிக்கிழமை அளித்தார். சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று தசாப்தங்கள் ஆகலாம் என்று அவர் கூறினார். சந்திரயான்-3 தரையிறங்கிய நிலையில், அவர் இவ்வாறு கூறினார். அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏற்கனவே இதைச் செய்துள்ளன என்று கூறிய அவர், ஆனால், இந்தியாவுக்கு சிறிது காலம் பிடிக்கும். ஏனென்றால் நாம் அந்த மனிதனை அனுப்புவது மட்டுமல்லாமல், அவரை உயிருடன் திரும்ப அழைத்து வர வேண்டும். தொழில்நுட்பத்தை அதிகரிக்க வேண்டும் என்றார்.
நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதில் உள்ள சவால்கள்
நிலவு பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியை சுற்றி வருகிறது. பூமியைப்போல் அங்கு தட்பவெப்ப நிலை என்பது சீராக இருக்காது. விண்வெளிக்கு என்று தனி வெப்பம் மற்றும் தனியான கோட்பாடே உள்ளது. அங்கு ஈர்ப்பு விசை மிக மிக குறைவு. காற்று மண்டலம் கிடையாது. எனவே, தரையிறங்குவதற்கு பாராசூட்டுகளை பயன்படுத்த முடியாது. தொழில்நுட்பம் நன்கு சோதிக்கப்பட்ட பின்பு மட்டுமே நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் நடவடிக்கையை நாம் எடுக்கலாம். ஆனால் இந்தியாவிற்கு குறைந்தது 20-30 வருடங்கள் ஆகலாம் என்கின்றனர்.
மேலும் படிக்க | ஆதித்யா எல்1 திட்டம் எதற்கு...? - ஈஸியாக விளக்கிய மயில்சாமி அண்ணாதுரை
நாசா நிலவுக்கு செல்ல தயாராகி வருகிறது
மீண்டும் நிலவுக்குச் செல்ல நாசா தயாராகி வருகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் மீண்டும் ஒரு முறை நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா தொடங்கியுள்ளது. இதில் மூன்று பணிகள் இயக்கப்படும். முதல் பணி ஆர்ட்டெமிஸ் -1 ஆகும், இது 2022 இல் நிறைவடைந்தது. இதன் கீழ், காலியான ஓரியன் கேப்சூல் சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. இந்த கேப்ஸ்யூல் சந்திரனைச் சுற்றி வந்த பிறகு பூமிக்கு வந்தது. இது 450,000 கிமீ பயணம் செய்து 130 கிமீ உயரத்தில் சந்திரனைச் சுற்றி வந்தது.
மனிதர்கள் நிலவில் இறங்கும் ஆர்ட்டெமிஸ்-2 மிஷன்
இதற்குப் பிறகு, ஆர்ட்டெமிஸ்-2 மிஷன் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்படும், அதில் 4 விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அனுப்பப்படுவார்கள். இவர்கள் சந்திரனை சுற்றி வந்த பிறகுதான் திரும்பி வருவார்கள். இந்த பணி எட்டு முதல் பத்து நாட்கள் வரை எடுக்கும் மற்றும் ஓரியன் தொகுதியின் உயிர் ஆதரவு அமைப்புகள் மற்றும் அதன் திறன்கள் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படும். மூன்றாவது ஆர்ட்டெமிஸ் பணி 30 நாட்களுக்கான மிஷனாக இருக்கும். அதன் கீழ் மனிதர்கள் சந்திரனுக்கு அனுப்பப்படுவார்கள். மனித தரையிறங்கும் அமைப்பை ஸ்பேஸ் எக்ஸ் வடிவமைத்து வருகிறது, இதன் மூலம் மனிதர்கள் நிலவில் இறங்குவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ